கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவனபுராவில், கணவன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்த லீலாவதி என்ற பெண், தனது கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக கணவனை கைவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 11 வருடங்களுக்கு முன், மஞ்சுநாத் – லீலாவதி தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மஞ்சுநாத் வாடகை கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இதனால் அடிக்கடி இரவில் வேலைக்குச் செல்வதுண்டு. இதனை பயன்படுத்திக் கொண்ட லீலாவதி, சந்தோஷ் என்ற நபருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்.
கணவர் இல்லாத நேரத்தில், சந்தோஷ் லீலாவதியின் வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார். ஒருகட்டத்தில் சந்தேகமடைந்த மஞ்சுநாத், மனைவியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தார். அதன்படி, ஒரு நாள் இரவு வேலைக்குச் செல்வதுபோல காரை எடுத்துச் சென்றவர், அருகில் உள்ள கிராமத்தில் காரை நிறுத்திவிட்டு காத்திருந்தார். இரவு 10 மணியளவில், லீலாவதி தனது கள்ளக்காதலன் சந்தோஷை வீட்டுக்கு அழைத்துள்ளார். அப்போது, மஞ்சுநாத் எதிர்பாராதவிதமாக வீட்டுக்கு வந்து, அவர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து கிராமத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பன்னரகட்டா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் விசாரித்தனர். அப்போது, கோபத்தின் உச்சியில் இருந்த லீலாவதி, தனது கழுத்தில் இருந்த தாலியை கழற்றி கணவர் மஞ்சுநாத்திடம் கொடுத்துவிட்டு, “நீ எனக்கு வேண்டாம். நான் சந்தோஷுடன் செல்கிறேன்” என்று கூறிவிட்டு, கள்ளக்காதலன் சந்தோஷுடன் அங்கிருந்து சென்றுவிட்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : 3 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..!! தீபாவளிக்கு முன்பே வரப்போகும் அதிர்ஷ்டம்..!!