நாட்டில் மாணவிகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுக் கொடுத்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. மேலும், பள்ளி – கல்லூரிகளில் படிக்கும்போதே மாணவிகள் கர்ப்பம் ஆகும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் தான், சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை அழைத்துக் கொண்டு பெற்றோர், மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது, சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், இதுகுறித்து காவல்துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் கொடுத்தது. இதையடுத்து, மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ராயப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால், சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறுவன், ஏற்கனவே திருவல்லிக்கேணி பகுதியில் செல்போன் பறித்த வழக்கில் கைதாகி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருப்பது தெரியவந்தது. பின்னர், சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கும் சிறுவன் மீது பதிவு செய்யப்பட்டது. தற்போது, அந்த சிறுவன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Read More : இந்த சின்ன சின்ன தவறுகளை செய்தால் கூட உங்கள் உடல் எடை கூடும்..!! இதை முதலில் கட் பண்ணுங்க..!!