பீகார் மாநிலம் மதுபனி மாவட்டம், தன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள கோயிலில் பூசாரி ஒருவர் தினசரி பூஜை செய்து வந்துள்ளார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமி மீது இவருக்கு விபரீத ஆசை வந்துள்ளது. இதையடுத்து, அவரை மயக்கி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த விவகாரம் சிறுமியின் தந்தைக்கு தெரியவந்த நிலையில், அவர் அதிர்ச்சி அடைந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட கோயில் பூசாரி, கோயிலில் பூஜை செய்து வருவதாகவும், தனது மகளை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும், சிறுமியிடம் தொடர்ந்து பேசுவதற்காக அவருக்கு செல்போன் ஒன்றையும் பூசாரி வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அந்த செல்போனில் சிறுமி பூசாரியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, தனது தந்தையிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார். இதுதொடர்பாக சிறுமியிடம் விசாரித்தபோது, கடந்த மூன்று மாதங்களாக கோயில் அருகே பூசாரி தன்னை அழைத்துச் செல்வதாகவும், அங்கு உடலுறவு கொண்டதாகவும் சிறுமி கூறியுள்ளார். தன்னை வெளியே அழைத்துச் செல்வதாகவும் பூசாரி கூறியதாக தெரிவித்துள்ளார்.
சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பூசாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் மாரடைப்பு வராது..!! ஏன் தெரியுமா..? மருத்துவர்கள் சொல்லும் காரணம்..!!