சர்க்கரை நோயாளிகளுக்கு சூப்பர் டிப்ஸ் சொன்ன சுகாதாரத்துறை அமைச்சர்..!! இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள நோயாளிகள் உணவு உண்ணும் முறையை மாற்றியமைக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நடைபெற்ற நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று தொடங்கி வைத்தார். அப்போது, பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சாப்பிடும் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது நாளொன்றுக்கு மூன்று வேளையாக சாப்பிடுவதை தவிர்த்து 5 வேளையாக சாப்பிட வேண்டும். நானே நீரிழிவு நோயாளிதான். 25 ஆண்டுகளாக நீரிழிவு நோயுடன்தான் வாழ்ந்து வருகிறேன். 2004ஆம் ஆண்டு விபத்தில் சிக்கியபோது எனது கால் எலும்பு நொறுங்கியது. அப்போது நடப்பதும், தரையில் அமர்வதே சிரமாக இருந்தது. ஆனால் தொடர்ந்து முயற்சி செய்ததால், 2014இல் மாரத்தான் போட்டியில் பங்கேற்றேன்.

சர்க்கரை நோயாளிகளுக்கு சூப்பர் டிப்ஸ் சொன்ன சுகாதாரத்துறை அமைச்சர்..!! இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

உலகம் முழுவதும் நடந்த 134 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று ஓடியிருக்கிறேன். இந்தியாவில் உள்ள 24 மாநிலங்களில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றிருக்கிறேன். அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் போட்டிகளில் ஓட வேண்டும் என்பதே என் விருப்பம். தினந்தோறும் 10 முதல் 15 கிலோமீட்டர் தொலைவுக்கு ஓடுகிறேன். நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனை அளிப்பது உணவும், உடற்பயிற்சியும்தான். நீரிழிவு நோய் வந்தால் போகாது. ஆனால் நீரிழிவு நோய் இருந்தாலும் எப்படி நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதற்காகவே இதுப்போன்ற விழிப்புணர்வு கண்காட்சிகள் இருக்கிறது” என்று பேசினார்.

CHELLA

Next Post

சாண்ட்விட்ச் பார்சலில் எழுதியிருந்த 'b**ch' வாசகம்..!! மேனேஜரின் விளக்கத்தால் அதிர்ந்துபோன பெண்..!!

Sun Nov 27 , 2022
ஸ்டார்பக்ஸின் காஃபி மற்றும் சப்வே-ன் சாண்ட்விட்ச் போன்றவற்றில் வாடிக்கையாளர்களின் ஆர்டர்கள் மீது அவர்களது பெயர்களை எழுதுவது வழக்கம். இதனை பெரும்பான்மையான மக்கள் விரும்புவதும் உண்டு. இருப்பினும் சமயங்களில் அவ்வாறு பெயர்களை எழுதுவதால் சில குளறுபடிகளும் நடப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், பெண் ஒருவரின் சாண்ட்விட்ச்சில் அவர் ஆர்டர் செய்த உணவின் பெயரை ஆங்கிலத்தில் B***h என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் இதைக் கண்டு அதிர்ந்துப்போன அப்பெண் ரெஸ்டாரென்ட் ஊழியரிடம் சென்று கேட்டபோது அவர் […]
சாண்ட்விட்ச் பார்சலில் எழுதியிருந்த 'b**ch' வாசகம்..!! மேனேஜரின் விளக்கத்தால் அதிர்ந்துபோன பெண்..!!

You May Like