பொதுவாகவே தினம் தோறும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் நமது உடலுக்கு அதிக அளவு நன்மை ஏற்படும். அதிலும், குறிப்பாக செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் ஏராளமான சத்துக்கள் நமக்கு கிடைக்கும். செவ்வாழை பழத்தில் பீட்டா கரோட்டின், விட்டமின் சி போன்றவைகள் அதிகளவு இருக்கின்றது. பீட்டா கரோட்டின் என்பது நம் உடலுக்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. நம் உடம்பிற்கு சத்து நிறைந்த உணவையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
செவ்வாழையில் பொட்டாசியம் அதிக அளவு இருக்கிறது. அவை சிறுநீர் கற்கள் உருவாகாமல் இருக்க உதவும். மேலும், தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகளும் நீங்கும். வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிடுவதனால் கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் வலுப்பெறுகின்றது. எலும்புகள் நன்கு உறுதியாக இருக்க வேண்டும் என்றால் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் இதய நோயில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
மேலும், செவ்வாழை சாப்பிடுவதால், புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கிறது. நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க வேண்டும் என்றால் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட வேண்டும். இதில் உள்ள வைட்டமின்கள் ரத்த அணுக்களை சீராக பராமரிக்க உதவுகிறது. செவ்வாழை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆற்றலை வழங்கி உடலை புத்துணர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில் உள்ள சர்க்கரை அளவு உடலை சோர்வில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், நெஞ்சு எரிச்சலினால் அவதிப்பட்டு வருபவர்கள் தினம் ஒரு செவ்வாழை எடுத்துக் கொள்வது நல்லது.
Read More : 5 ஏக்கர் நிலம், கார், டிராக்டர் இருந்தும் உரிமைத்தொகை ரூ.1,000 பெறுகிறார்களா..? உடனே புகாரளிக்கலாம்..!!