fbpx

தினமும் தூங்கும் முன்னர் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை பலன்கள் உள்ளதா…?

வாயுத்தொல்லைக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்து. எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தூங்கும் முன்னர் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால், வாயுத் தொல்லை குறையும்.

தினமும் இரவில் படுக்கும் முன்பு ஒரு பூண்டுப் பல் பச்சையாகவே கடித்து சாப்பிட, உடம்பில் உள்ள அதிகபடியான கொழுப்பு போய் விடும். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண்டால், சர்க்கரை அளவை சீராக வைப்பதோடு, இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது.

ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள், பூண்டுப் பாலினை சாப்பிட மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும். பூஞ்சையால் ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும தொற்றுக்களை குணப்படுத்த பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் பெரிதும் உதவுகிறது.

பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.

பூண்டைப் பொடி செய்து தேனில் குழைத்து தலை, புருவம் மற்றும் பூச்சிவெட்டினால் முடிவளராமல் இருக்குமிடத்தில் தேய்த்து வர முடி வளரும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலி மறையும். புளிப்பால் உண்டாகும் எரிச்சல் நீங்கும். இரத்த அழுத்தம் குறையும்.ஜலதோஷம், கடுமையான சளி மற்றும் இருமலால் அவதிப்படுபவர்கள் தூங்கும் முன் ஒரு பல் பூண்டை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
பூண்டுடன் சிறிதளவு ஓமத்தை நசுக்கிப்போட்டு கசாயம் வைத்துக் குழந்தகளுக்குக் கொடுக்க குழந்தைகளின் வாந்தி குறையும். தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டால் ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் தீரும்.

Next Post

பென்ஷன் வாங்கும் நபர்கள் 31-ம் தேதிக்குள் இதை சமர்ப்பிக்க வேண்டும்...! இல்லை என்றால் ஓய்வூதியம் கிடையாது...

Wed Nov 23 , 2022
ஓய்வூதியம் பெரும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் ஆயுள் சான்றிதழை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவில் ஓய்வூதியம் பெரும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தை இடைவேளையின்றி தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டுதோறும் தங்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான தேதி முடிவடைந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நவம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சமர்ப்பிக்க தவறினால், ஓய்வூதியப் […]

You May Like