fbpx

Red Banana: இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் செவ்வாழை..!

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? அவசியம் தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாக வாழைப்பழம் என்பது மிகவும் ஊட்டச்சத்து மிகுந்தவை என்பது நமக்கு தெரிந்ததே. இந்த வாழைப்பழத்தில் பல வகைகள் இருக்கின்றன. இதில் குறிப்பாக செவ்வாழைப்பழம் என்பது சாப்பிடுவதற்கு ருசியாகவும், உடலுக்கு தேவையான பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை தருபவையாகவும் உள்ளது. செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

1. செவ்வாழைப்பழத்தில் பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
2. இதில் பீட்டா கரோட்டின் மற்ற வாழைப்பழங்களை விட அதிகமாக உள்ளதால் செவ்வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய தமனிகளில் ரத்தம் உறைவதை தடுக்கிறது.
3. மேலும் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் செய்வதோடு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களையும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
4. தினமும் உணவு உண்ட பின்பு செவ்வாழை  பழத்தை  சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலத்தை சீர்படுத்தி குடல் புண்கள், நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. 
5. மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் செவ்வாழைப்பழத்தை கண்டிப்பாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
6. மேலும் செவ்வாழைப்பழம் கண்களில் பார்வை திறனை மேம்படுத்துவதோடு, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை முற்றிலுமாக போக்குகிறது.
7. இதில் கால்சியம் அதிகமாக உள்ளதால் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமையை சேர்க்கிறது.
8. கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.
9. சூடு சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் வெயில் காலங்களில் அடிக்கடி செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

English summary : Many disease cured by eating red banana

Read more : தீராத நோயை தீர்க்கும் அற்புத திருக்கோயில்.! இந்த பரிகாரம் செய்து பாருங்கள்.!?

Rupa

Next Post

சற்றுமுன்...! வெங்காய ஏற்றுமதி தடை மார்ச் 31 வரை நீடிப்பு...!

Wed Feb 21 , 2024
வெங்காயத்தின் ஏற்றுமதிக்கான தடை, மார்ச் 31ம் தேதி வரை தொடரும். வெங்காயத்தின் ஏற்றுமதிக்கான தடை, மார்ச் 31ம் தேதி வரை தொடரும் என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 8, 2023 அன்று, அரசாங்கம் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்த தடை உத்தரவு மார்ச் 31 வரை தடை நீக்கப்பட்டது . “வெங்காய ஏற்றுமதி மீதான தடை நீக்கப்படவில்லை. அது நடைமுறையில் உள்ளது மற்றும் நிலையில் எந்த […]

You May Like