fbpx

தினமும் மிளகு சாப்பிடுவதால்… இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..

சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டிற்கும் சிறந்ததாக வீட்டில் இருக்கும் மசாலா பொருட்கள் கருதப்படுகின்றன… அதனால்தான் மிளகு, கிராம்பு, ஏலக்காய், போன்ற பல மசாலாப் பொருட்கள் இந்திய வீடுகளின் சமையலறைகளில் வைக்கப்படுகின்றன. அந்த வகையில் மிளகின் நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம்..

மிளகில் உடலுக்கு நன்மை பயக்கும் பல பண்புகள் உள்ளன… அந்த வகையில், கருப்பு மிளகு உடலில் புண்ணிற்கும் நிவாரணம் அளிக்கிறது.. மிளகை, அரைத்து காயப்பட்ட இடத்தில் தடவினால், குறைந்த நேரத்தில் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இது தவிர, கருப்பு மிளகு முக முகப்பருக்கும் உதவுகிறது. பற்கள் தொடர்பான எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்க மிளகு உதவும். கடுகு எண்ணெயை, கல் உப்பு மற்றும் வேர்க்கடலையுடன், மிளகை அரைத்து வைத்தால், ஈறுகளின் வலி நீங்கும். மிளகில் உள்ள பைபரின் என்ற பொருள், மனச்சோர்வு எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. எனவே கருப்பு மிளகு மக்களின் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.

குளிர்காலங்களில் இருமல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து மிளகு நிவாரணம் அளிக்கும். இது தவிர, கருப்பு மிளகு முடி உதிர்தலையும் தடுக்கக்கூடியது.. வாயு மற்றும் அமிலத்தன்மையின் பிரச்சனைகளுக்கு மிளகு சிறந்த நிவாரணமாக கருதப்படுகிறது.. எலுமிச்சை சாறுடன் உப்பு மற்றும் கருப்பு மிளகு சாப்பிடுவதன் மூலம் நிவாரணம் பெறலாம்.

உங்களுக்கு நீண்ட நேரம் விக்கல் இருந்தால், சிறிது புதினா எடுத்து 2 ஸ்பூன் பெருஞ்சீரகம், சர்க்கரை மற்றும் மிளகு ஆகியவற்றை அரைக்கவும். பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும். உங்கள் விக்கல் உடனடியாக நின்றுவிடும்.. இவை தவிர 5 கருப்பு மிளகு வறுத்து, அரைத்து அதனை முகர்ந்து பார்ப்பதன் மூலம் விக்கல் நீங்கும்.

Maha

Next Post

இந்த மாவட்டத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமல்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

Fri Sep 9 , 2022
ராமநாதபுரத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை மறுநாள் (11.09.2022) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.. மேலும் அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடைபெற உள்ளது.. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இன்று முதல் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் […]

You May Like