ஒருவர் உயிருடன் இருக்கிறானா என்பதை இதயமும் மூளையும் தான் தீர்மானிக்கிறது. இதயம் துடிப்பதை நிறுத்தினால், அந்த நபர் இறந்துவிட்டார் என அறிந்து கொள்ளலாம். மூளை இறந்துவிட்டாலும், அந்த நபர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறார்.
ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான மூளை இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் சில நேரங்களில், மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற காரணங்களால் மூளைக்கு இரத்த விநியோகம் தடைபட்டு மூளை பாதிக்கப்படுகிறது. இது பொதுவாக மூளை பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது.
மூளை பக்கவாதம் என்றால் என்ன ? : இரத்த ஓட்டம் இயல்பாக இருந்தால் தான், உடல் முழுவதும் இயங்கும். இதயத்தின் வேலை உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்வதாகும். ஆனால் பல சமயங்களில் மூளைக்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்தம் சென்றடைவதில்லை. சில நேரங்களில் இரத்த நாளங்கள் வெடிப்பதால் மூளைக்குள் இரத்த கசிவு ஏற்படும் மூளை பகுதிக்கு செல்லும் ரத்தம் செல்லவில்லை என்றால், மூளையினால் இயங்க முடியாது. இது தான் மூளை பக்கவாதம்.
மூளை உடலின் ஒவ்வொரு பகுதியையும் கட்டுப்படுத்துகிறது. இது பாதிக்கப்பட்டால், உடல் முழுவதும் பாதிக்கப்படும். மூளை பக்கவாதம் கண்களின் பார்வை திறனை பாதிக்கிறது. சில நேரங்களில் வெளிச்சம் அதிகமாகவும், சில சமயங்களில் மங்கலாகத் தோன்றும். மூளையில் இருந்து தகவல்களைச் சுமந்து செல்லும் நரம்பு சேதமடைவதால் இது நிகழ்கிறது.
முகத்தில் தோன்றும் பாதிப்புகள் : முகத்தின் ஒரு பகுதி இயல்பான நிலைக்கு மாறாக இருக்கும். இது முகபாவனையையும் பாதிக்கிறது. பக்கவாதம் காரணமாக வாய் அல்லது கண்கள் அடிக்கடி இழுத்துக் கொள்வது போல் இருக்கும்.
உடலில் ஆற்றல் இல்லாத நிலை : உடலில் ஆற்றல் என்பது முற்றிலும் இருக்காது. சில சமயம் உடம்பு முழுவதும் மரத்துப் போனது போன்ற உணர்வு ஏற்படும். இது மாரடைப்புக்கான பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். மூளையின் ஒரு பகுதியில் ரத்தக்கசிவு ஏற்படுவதால், மற்றொரு பகுதி மரத்துப் போகிறது.
நெஞ்சு வலி : சில நேரங்களில் நோயாளிக்கு மார்பு பகுதியில் கடுமையான வலி ஏற்படலாம்.. இது வாயு அல்லது அஜீரணத்தின் வலி என்று அலட்சியபடுத்தாமல் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
பேச்சில் தடுமாற்றம் : மூளையின் செயல்பாடு பாதித்தால், அதனை உடல் முழுவதும் காணலாம். பக்கவாதத்தின் போது நாக்கிலும் அதன் தெரியும். ஏனெனில் இது மூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு நபர் தடுமாறுகிறார் அல்லது பேச முடியாமல் குளறுகிறார் என்றால், கவனம் செலுத்தவும். பக்கவாதத்தின் போது நாக்கில் உள்ள தசைகள் செயலிழந்துவிடும். அதனால் நோயாளி முயற்சி செய்தாலும் பேச முடியாது.