பேபி கார்ன் 65 வீட்டிலேயே செய்வது என்பது குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் – 12,
மைதா மாவு – 2 மேஜை கரண்டி,
எலுமிச்சை சாறு – சிறிதளவு,
அரிசி மாவு – 3 மேஜை கரண்டி,
சோளமாவு – 1.5 மேஜை கரண்டி,
இஞ்சிபூண்டு விழுது – சிறிதளவு,
மிளகாய்தூள் – 1 மேஜை கரண்டி,
தயிர் – 5 கரண்டி,
கரம் மசாலா – 1 கரண்டி,
கறிவேப்பில்லை – கையளவு,
உப்பு, தண்ணீர், எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் பேபி கார்னை எடுத்துக்கொண்டு நீளமாக்க நறுக்கி சிறுசிறு துண்டாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். நீரினை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவைக்க வேண்டும்.
அதன் பின்னர் அகண்ட பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு, தயிர், மிளகாய்தூள், இஞ்சிபூண்டு விழுது, கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீரை கொண்டு கலவையாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு வந்த மசாலா கலவையுடன் பேபி கார்னுடன் வானெலியில் தயாராக இருக்கும் சூடான எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால் சுவையான பேபி கார்ன் 65 தயாராகிவிடும்.