fbpx

நீரிழிவு நோயாளிகள் தங்களின் பாதங்களை நீரில் ஊறவைப்பதால் என்னவாகும்.!

பாதங்களை பொதுவாக வெதுவெதுப்பான தண்ணீரில் வைக்கும் போது அனைவருக்கும் சற்று வலிகளுக்கு நன்றாக இருக்கும். வேலை செய்து விட்டு கலைப்பாக இருப்பவர்களுக்கு இன்னும் சற்று இதமாகவே இருக்கும். ஆனால் நீரிழிவு நோயாளிகள் இவ்வாறு செய்யும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு பல ஆபத்துகள் வந்த வண்ணம் இருக்கிறது.

நியூரோபதி :

இந்த நிலை பாதங்களில் உள்ள நரம்புகள் கொஞ்ச கொஞ்சமாக சிதையத் தொடங்கும் நிலையாகும். கால்களை நீரில் நனைக்கும் போது அதன் வெப்பநிலையை அளவிடுவது மிக கடினமான ஒன்று.
இந்த நிலையில், பாதத்தின் தோலை காயப்படுத்தும் மேலும் எரியும் சூழலையும் ஏற்படுத்தும்.

பூஞ்சை தொற்று :

நீரிழிவு நோயாளிகளின் பாதங்களில் பூஞ்சை தொற்றுகளை உருவாக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு வரும் நோய்த்தொற்றுகள் பொதுவாக பாதங்களில் உள்ள கால் விரல்களின் இடையே சரியாக காயாததால் வருகின்றன. கால்களை நனைத்தால் , நன்கு அதனை உலர வைக்காமல் இருந்தால், பூஞ்சை தொற்றுநோயை அது உருவாக்கும்.

வறண்ட பாதங்கள் :

நீரிழிவு நோயாளிகள் அதிகமாக வறண்ட சருமத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தண்ணீர் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்களை அகற்றிவிடுகிறது. இதன் காரணமாக சருமம் விரைவில் வறண்டு விடுகிறது. மேலும், விரிசல் ஏற்படவும் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. இதனை தொடர்ந்து பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளின் ஆபத்தை வரவழைக்கிறது.

Baskar

Next Post

சம்பளம் ரூ.1,20,000...!! மத்திய அரசின் நிறுவனத்தில் சூப்பர் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Sun Nov 20 , 2022
மத்திய அரசின் நிறுவனமான நேஷனல் லேன்ட் மொநெட்டிசேசன் கார்ப்பரேஷன் (National Land Monetization Corporation) புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் விவரங்கள்: பணியின் பெயர் காலியிடங்கள் இடம் Consultant 3 டெல்லி Young Professional 4 டெல்லி Consultant பணியின் விவரங்கள் : பணியின் பிரிவு சம்பளம் கல்வித்தகுதி Finance ரூ.1,20,000 CA முடித்திருக்க […]
சம்பளம் ரூ.1,20,000...!! மத்திய அரசின் நிறுவனத்தில் சூப்பர் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

You May Like