தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பதற்காக பலரும் பல விதமான உணவுகளையும், டயட் முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் பலரும் காலையில் எழுந்ததும் அவித்த முட்டைகளை சாப்பிட்டு வருகின்றனர். புரதச்சத்து மற்றும் கால்சியம் அதிகமாக இருக்கும் முட்டையை சாப்பிடும் போதுஉடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது.
மேலும் இது பசியை கட்டுக்குள் வைப்பதால் அதிகமாக சாப்பிடுவது குறையும். இதனால் உடல் எடையும் குறையும். முட்டையில் உள்ள அதிகப்படியான ஆன்டிஆக்சிடென்ட்கள் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. முட்டையில் கொழுப்புச்சத்து அதிகமாக உள்ளதால் உடல் எடை அதிகரிக்கும் என்றும், இதய நோய் ஏற்படும் என்றும் பலர் கருதி வருகின்றனர்.
ஆனால் அதில் உண்மை இல்லை. முட்டையில் உள்ள கொழுப்புச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க செய்கிறது. ஆனால் நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் முட்டையை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. குறிப்பாக வேக வைத்த முட்டை சாப்பிடும் போது நீரிழிவு பிரச்சினை இருப்பவர்களுக்கு எளிதாக ஜீரணமாகாது என்பதால் செரிமான பிரச்சனை மற்றும் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நீரிழிவு பிரச்சினை இருப்பவர்கள் முட்டையை வேகவைத்து சாப்பிடும் போது இதில் உள்ள வெள்ளை கருவை மட்டும் சாப்பிடலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் முட்டை சாப்பிட்டு விட்டு போதுமான அளவு உடற்பயிற்சி செய்யும் போது சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து வருகிறது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.