fbpx

இந்த நோய் இருப்பவர்கள் அன்னாசி பழம் கண்டிப்பாக சாப்பிட கூடாது.!? மருத்துவர்களின் அறிவுரை என்ன.!?

பொதுவாக ஒரு சாதாரண மனிதர் தினமும் பழங்கள், காய்கறிகள் என ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் பழங்களிலேயே ஏதாவது ஒரு வகையை கண்டிப்பாக உட்கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறிப்பாக அன்னாசி பழத்தில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் பல நோய்கள் குணமடைகிறது.

மேலும் அன்னாசி பழத்தில் வைட்டமின் பி, வைட்டமின் சி, நார்ச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், சிட்ரஸ் அமிலம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதை பழங்களின் ராணி என்று அழைத்து வருகிறார்கள். இவ்வாறு ஊட்டச்சத்து நிறைந்த பழத்தை நீரிழிவு பிரச்சினை இருப்பவர்கள் சாப்பிடலாமா என்பது குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

அன்னாசி பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது, செரிமான பிரச்சனையை சரி செய்வது, வயிற்றுப்புண் மற்றும் காயங்களை ஆற்றுவது என பலவகையான நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்திருந்தாலும், சர்க்கரை நோய் பிரச்சினை இருப்பவர்கள் அன்னாசி பழத்தை சாப்பிட கூடாது.

இந்த பழத்தில் அதிக அளவு இனிப்பு நிறைந்துள்ளதால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும், அதிகரிக்கிறது. அண்ணாச்சி பழத்தை சாப்பிட விரும்புபவர்கள் மருத்துவர்களின் அறிவுரையை பெற்றுவிட்டு அதன் பிறகு குறைவான அளவு மட்டும் அன்னாசி பழத்தை சாப்பிடலாம்.

English summary : diabetic patients should not eat pine apple fruit

Read more : குளத்து மண்ணில் திருநீர் தோன்றும் அதிசய திருக்கோயில்.! எங்கு உள்ளது தெரியுமா.!?

Baskar

Next Post

Ration கடை இயங்கும் நாட்களில் அதிரடி மாற்றம்..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!! விரைவில் வெளியாகும் அறிவிப்பு..?

Fri Mar 1 , 2024
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த ஆலோசனை ஒன்று தமிழ்நாடு அரசு தரப்பில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்பெற்று வருகின்றனர். இதற்கிடையே ரேஷன் கடை ஊழியர்களின் பணிகள் அபரிமிதமானது. பண்டிகை காலங்களை கணக்கில் கொண்டு, பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட பணிகளுக்காக கூடுதல் பணிகளையும் இவர்கள் மேற்கொண்டு […]

You May Like