fbpx

வேப்ப எண்ணெயை முகத்தில் தடவினால் இளமையாக இருக்கலாம் தெரியுமா?

வேப்ப எண்ணெய்யில் ஆன்டி ஆக்சிடன்ட் சத்துகள் அதிகம் இருக்கின்றன. வேப்ப எண்ணெய்யை வாரத்திற்கு ஒரு முறை தோலில் நன்கு தடவிய பின்பு குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.

வேப்ப எண்ணெய்யில் மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்கள் உள்ளன. வேப்ப எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபாயம் குறைவு.

அனைத்து விதமான சுவாசப் பிரச்சனைகளையும் நீக்கும் தன்மை வேப்ப எண்ணெய்க்கு உண்டு. கெட்ட சுவாசம், ஆஸ்துமா போற்றவற்றை குணப்படுத்தும் சக்தி வேப்ப எண்ணெய் பயன்படுகிறது.

வேப்ப எண்ணெய்யை எடுத்து அதை சிறிது நீரில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் எண்ணெய் பசைக் கட்டுப்படும். மேலும் முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளும் அகலும்.

கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களாகிய தேங்கியிருக்கும் நீர்நிலை தேங்காய் ஓடுகள் போன்ற இடங்களில் வேப்ப எண்ணெய்யை தெளித்து வந்தால் கொசுக்களின் உற்பத்தி குறைந்து கொசுத்தொல்லை நீங்கும்.

Next Post

குட் நியூஸ் மக்களே...! சொத்து வரி செலுத்த மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிப்பு...! எப்படி செலுத்துவது...?

Wed Nov 23 , 2022
சொத்துவரினை தனிவட்டி இல்லாமல் செலுத்த மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் ஆக்டோபர் 1-ம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. தாமதமாக சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்த வேண்டும். எனினும் சொத்துவரி […]

You May Like