பொதுவாக பழங்கள் என்றாலே நம் உடலுக்கு மிகவும் ஊட்டச்சத்தை தருபவையாகவே இருந்து வருகின்றன. அந்த வகையில் அன்னாசிப்பழம் நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை தந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலில் பல வகையான நோய்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாத்து வருகிறது. இந்த அன்னாசி பழத்தினை ஜூஸாக எடுத்துக் கொள்வதால் உடலில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை குறித்து பார்க்கலாம்?
1. அன்னாசி பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி பசியை தூண்டுகிறது.
2. அன்னாசி பல சாறுடன் மிளகுத்தூள் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், தொண்டை கரகரப்பு, தொண்டை வலி போன்ற தொல்லைகள் சரியாகும்.
3. வெற்றிலை மற்றும் 10 துளசி இலைகளை நன்றாக அரைத்து அண்ணாச்சி பழ சாறில் கலக்கி குடித்து வந்தால் எந்த விதமான தலைவலியும் உடனடியாக குணமாகும்.
4. அன்னாசி பல சாறு மற்றும் திராட்சை பழச்சாறு இரண்டையும் சேர்த்து குடித்து வந்தால் ஹீமோகுளோபின் அதிகரித்து ரத்த சோகை நீங்கும்.
5. அல்சர் நோய் ஆரம்பகட்டத்தில் இருக்கும்போது பசும்பாலுடன் அன்னாசி பழச்சாறு கலந்து குடித்து வந்தால் நோய் குணமாகும்.
6. மாதவிடாய் பிரச்சனைகள் நீங்க அருகம்புல்லை அரைத்து அன்னாசி பழச்சாறுடன் சேர்த்து குடித்துவர வயிறு வலி, வெள்ளைப்படுதல், அதிகப்படியான ரத்தப்போக்கு சரியாகும்.
7. உடல் அசதி, சோர்வு, உடல் வலி போன்ற பிரச்சனைகள் சரியாக அன்னாசி பல சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வரலாம்.
8. அன்னாசி பல சாறுடன் இஞ்சியை தட்டி சாறு எடுத்து கலந்து குடித்து வந்தால் பித்த வாந்தி நிற்கும்.
9. குறிப்பாக தூக்கமின்மை, மனச்சோர்வு, மனப்பதட்டம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் அன்னாசி பல சாறுடன் கசகசாவை அரைத்து கலந்து குடித்து வந்தால் இப்பிரச்சனைகள் உடனடியாக குணமடையும்.
10. அன்னாசி பல சாறுடன் வெந்தயத்தை பொடி செய்த மாவை கலந்து தலையில் தேய்த்து வந்தால் தலை முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.