ஆரோக்கியமாக இருக்க பல்வேறு வகையான பழங்களை பலரும் உட்கொள்கின்றனர்.. `ஆனால் ஒரு சில பழங்களின் விதைகளை உட்கொண்டால், அது விஷமாக மாறும் என்று உங்களுக்கு தெரியுமா..? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்..
மக்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் செர்ரி பழங்களும் ஒன்று.. ஆனால் செர்ரி விதைகளை சாப்பிடுவதன் மூலம், உங்களுக்கு பல வயிற்று பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன, எனவே அவற்றை உட்கொள்ளும்போது கவனமாக இருங்கள்.
தொடர்ந்து ஆப்பிளை உட்கொண்டால், பல நோய்களில் இருந்து விலகி இருக்க முடியும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள், அதனால் பலர் ஆப்பிள் சாப்பிடுவதை வழக்கமாகக் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் ஆப்பிள் பழத்தை சாப்பிடும் போது அதன் விதைகளை தவறுதலாக உட்கொள்ளாதீர்கள்.. ஏனெனில் ஆப்பிளின் விதைகளில் வயிற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும் சயனைடு உள்ளது. எனவே தவறுதலாக கூட ஆப்பிள் விதைகளை உட்கொள்ள வேண்டும்..
பிளம் பழங்களை பலரும் விரும்பி சாப்பிட்டு வருகின்றன. மேலும் இந்த பழத்தின் நடுவில் ஒரு பெரிய மற்றும் கடினமான விதை காணப்படுகிறது.. இந்த விதைகள் ஆபத்தானதாக கருதப்படுகிறது.. எனவே இந்த விதைகளை அகற்றாமல் சாப்பிட்டால் அது டலுக்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.