fbpx

இந்த நோய் உங்களுக்கும் இருக்கா..? தாமதம் செய்யாமல் உடனே இதை பண்ணுங்க..!!

வெரிகோஸ் நோயின் பிடியில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த நோய் ஏற்பட வயது, உடல் பருமன், பரம்பரை ஆகியவை காரணமாக அமைந்திருக்கின்றதாக கூறப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலில் ரத்தக்குழாய் சுருள் சுறுளாக வீங்கி காணப்படும். வெரிகோஸ் என்பது ரத்தக்குழாய் சம்பந்தமான ஒரு நோயாகும். வீங்கி வலிக்கும் நரம்புகள் உடலில் மற்ற இடங்களில் தோன்றும் என்றாலும் பொதுவாக இந்த நோயானது காலில் உள்ள ரத்த குழாய்களில் ஏற்படும் சிக்கலை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நோய் பாதிப்பு உள்ளானவர்களுக்கு நரம்புகள் முழங்காலுக்கு பின்புறத்தில் உருவாகின்றது. நாள் முழுவதும் நின்று கொண்டோ அல்லது உட்காந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கு இந்த நோயானது அதிகம் ஏற்படுகிறது. தசையின் அடர்த்தியை ஒருவர் இழக்கும் போது தசை இடைவெளிகள் உண்டாகி ரத்தக்குழாய்களில் புடைப்பும் சுருளும் உண்டாகிறது. இதனால் வீங்கி வலியை ஏற்படுத்தி இரத்த ஓட்டம் சரியாக இல்லாமல் மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், ரத்தக்கசிவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நோயை ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி அவரிடம் ஆலோசனை பெற்று அதன்படி நடப்பது அவசியம். மயக்க மருந்து கொடுத்து புடைப்பு இரத்தக்குழாய் நீக்குகின்றனர். இந்த நோயின் தீவிரத்தை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரத்த சிதைவுகளில் லேசர் கருவிகளைக் கொண்டு சூடேற்றியோ அல்லது மருத்துவ சிகிச்சை மூலமாகவோ அடைத்து விடுகின்றனர் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Chella

Next Post

வெறும் 5 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகிவிடும்.. அதிவேக சார்ஜரை வெளியிட்ட பிரபல நிறுவனம்..

Thu Mar 2 , 2023
வெறும் 5 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்யக்கூடிய அதிவேக சார்ஜரை Redmi நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.. ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்ட இந்த நவீன யுகத்தில், வேகமாக சார்ஜ் செய்யும் சார்ஜர்களை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், Realme நிறுவனம் 240W சார்ஜரை அறிமுகம் செய்தது.. இது 9.5 நிமிடங்களில் 4,600mAh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் […]

You May Like