fbpx

பூசணி விதைகள் எவ்வளவு நன்மைகள் தருகின்றது தெரியுமா?

பலவிதமான சத்துக்கள் நிறைந்த பூசணி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் விதைகளும் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை. 

பலவிதமான சத்துக்கள் நிறைந்த பூசணி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் விதைகளும் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதில் ஒமேகா 6 மற்றும் புரதம், இரும்பு, பீட்டா-கெராடின் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், புற்று நோய் முதல், இதய ஆரோக்கியம் வரை உடல் நல பிரச்சனைகளுக்கு பூசணி விதைகள் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இன்றைய காலக்கட்டத்தில் உணவுப் பழக்கவழக்கங்களாலும், மாறிவரும் வாழ்க்கை முறையாலும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அந்நிலையில் பூசணி விதைகள் பெரும் நன்மை பயக்கும், அதில் உள்ள நார்ச்சத்து, செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜிங்க் போன்றவை புற்று நோயை தடுக்க உதவுகின்றன. புரோஸ்டேட் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும் பூசணி விதைகள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதை உட்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இதை உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை வியாதி வராது.

இதயத்தை ஆரோக்கியம் மேம்படும் பூசணி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்களைத் தடுக்கும், இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.எனவே இதனை தினமும் உட்கொள்ளலாம்.

ஆற்றல் அளவு அதிகரிக்கும் இன்றைய காலக்கட்டத்தில் வேலை பளுவின் காரணமாக ஆற்றல் குறைவாகவே உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் இது ஒரு நோய் தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது. பூசணி விதைகளை உட்கொள்வதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் மற்றும் ஆற்றல் சீராக இருக்கும். சத்தான மூலகம் ஆண்களுக்கு ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. எனவே ஆண்கள் கண்டிப்பாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். பூசணி விதைகளை உணவில் சேர்ப்பதை வழக்கமாக கொள்ளவும்.

Next Post

ஷாக்....! 600-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்து நீக்கம்...! தமிழக அரசு அதிரடி உத்தரவு...!

Wed Nov 2 , 2022
குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் பணிபுரிந்துவந்த 600-க்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை இயக்குனர் அமுதவல்லி வெளியிட்ட அறிவிப்பில்; மத்திய அரசு வழிகாட்டுதலின் படி, போஷான்‌ அபியான்‌ திட்டத்திற்கென வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில்‌ 01.08.2022 முதல்‌ ஒப்புதல்‌ அளிக்கப்படாமல்‌ விடுபட்டுள்ள ஒப்பந்த பணியிடங்கள்‌ தொடர்பாக மத்திய அரசின்‌ நெறிமுறைகளை கண்டிப்பாக நடவடிக்கை மேற்‌கொள்ளுமாறும் மற்றும்‌ […]

You May Like