fbpx

புடலங்காயில் எவ்வளவு நன்மைகள் தெரியுமா? அறிந்துகொள்ளுங்கள்!!

புடலங்காயில் கொத்துப்புடலை, நாய்ப்புடலை, பன்றிப்புடலை, பேய்ப்புடலை என பலவகை உள்ளது. குடல் புண்ணை ஆற்றுவதற்கும் தொண்டை புண்ணை ஆற்றுவதற்கு மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகளுக்கும் புடலங்காய் மருந்தாக உள்ளது.  

புடலங்காயில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும்.புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகியவை நிறைந்திருக்கின்றன.

புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட்டால் நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள், புடலங்காயை எந்த வகையிலாவது உணவில் சேர்த்துகொண்டால், அனைத்து வகையான சத்துகளும் அவர்களுக்கு கிடைக்கும்.புடலங்காய் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. புடலங்காய் இலைச் சாற்றை சிறிது எடுத்து நீருடன் கொத்தமல்லியையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை, தினமும் மூன்று வேளை குடித்து வர மஞ்சள் காமாலை வராது. காய்ச்சலையும் குணபடுத்தும்.

புடலங்காயில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. புடலங்காயில் தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் அதிக அளவு இருப்பதால் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும் தன்மை கொண்டது. தலையில் உள்ள பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு

புடலங்காயின் விதைக்குள் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு, நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சத்துகள், கொழுப்புச்சத்து போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. புடலங்காய் நீர்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதால் இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் செய்யும். புடலங்காயால் உடல் பெறும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

உணவு முறையால் தான் மலச்சிக்கல் என்பதை மறுக்க முடியாது. ஆனால் சில குறிப்பிட்ட உணவு வகைகள் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியவை. அத்தகை உணவு வகையில் புடலங்காய் சேர்த்து சமைத்த உணவுகள் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துகொள்ளும்.

நார்ச்சத்து நிறைந்த புடலங்காய் நீர்ச்சத்தும் கொண்டிருக்க கூடியவை என்பதால் இது குடல் இயக்கத்தை சீராக்கி மலத்தின் கடினத்தை குறைத்து மென்மையாக்கி வெளியேற்றும்.  எடை குறையும் போது அதிக கலோரிகள் நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும் என்று சொல்வார்கள். அதே போன்று எடுத்துகொள்ளும் உணவு உடலில் இருக்கும் கொழுப்பையும் கரைத்தால் எடை இழப்பு வேகமாக இருக்கும். அந்த செயலை சிறப்பாக செய்யும் புடலங்காய்.

எடை இழப்பில் உடலுக்கு தேவையான வைட்டமின்களையும் நிறைவாக தருவதோடு குறைந்த கலோரி கொண்டிருப்பதால் எடை இழப்பும் சாத்தியமாகிறது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் வாரத்துக்கு 3 நாட்கள் புடலங்காய் பச்சடி அல்லது கூட்டு செய்து சாப்பிட்டால் எடை இழப்பு வேகமாக இருக்கும்.

ரத்தத்தில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றினாலே பாதி நோய் அண்டாமல் தடுத்துவிடலாம். புடலங்காய் ரத்த சுத்தியாக செயல்படும். பொதுவாக நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் சிறுநீரை வெளியேற்ற கூடியவை. புடலங்காய் உடல் நச்சுத்தன்மை போன்று சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீரில் வெளியேற வேண்டும். கழிவுகள் தேங்கும் போது அதிகப்படியான ஆசிட் சிறுநீரகத்தில் கற்களாக மாறுகிறது.

புடலங்காய் சிறுநீரகங்களுக்குள் திரவங்கள் சுரக்கப்படுவதை அதிகரிக்க செய்வதொடு அதை உடனடியாக உள் இருக்கும் கழிவுகளையும் வெளியேற்ற தூண்டுகிறது. உள் உறுப்புகள் சரியான நீரேற்றத்தொடு இருக்க செய்கிறது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையின் பணிகளை மேம்படுத்துகிறது.

Next Post

பெற்றார்களே... டெங்குவால் 6 வயது சிறுமி பலி...! காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் இது தான்...!

Wed Nov 9 , 2022
சென்னையில் டெங்கு காய்ச்சலால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் என்பவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ராகஸ்ரீ என்ற மகள் உள்ளார். 2-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், ஜமீன் பல்லாவரத்தில் உள்ள […]

You May Like