உங்களுக்கு மூட்டு வலி அடிக்கடி வர்ரதுக்கு காரணம் உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகம் சுரப்பதுதான். மூட்டு வலி, மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு பிடிப்பு போன்ற பிரச்சனைகள் இந்த அமிலத்தால் ஏற்படும்விளைவுதான்.
ஒருவரது உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்கள் யூரிக் அமிலத்தை உயர்த்தும் உணவுகளை உண்பது. இப்படிப்பட்ட உணவை உண்பதால் உடல் பருமன், சர்க்கரை நோய்போன்றவை ஏற்படலாம்.

இன்றைய காலகட்டத்தில் பலர் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சியின்மையால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இந்த பிரச்சனைகளில் ஒன்று தான் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பது. பெரும்பாலான நேரங்களில், சிறுநீரகங்களால் யூரிக் அமிலத்தை சரியாக வெளியேற்ற முடியாமல் போகிறதோ, அப்போது உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கச்செய்கின்றது.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தாமல் இருந்தால், அது கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயத்தின் ஆரோக்கியயத்தையும் கெடுக்கும். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களுடன், உண்ணும் உணவுகளையும் கவனிக்க வேண்டும்ம். எந்தெந்த காய்கறிகளை அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
காய்கறிகளால் உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு காரணம், அதில் உள்ள பியூரின் என்ற பொருள் தான் காரணம். உடலில் பியூரின் என்னும் பொருள் சரியாக செரிமானமாகாமல் இருந்தால் அல்லது பியூரின் நிறைந்த காய்கறிகளை அதிகளவில் உண்ணும் போது, அது யூரிக் அமிலத்தின் அளவை உடலில் அதிகரிக்கிறது. இப்போது இந்த பியூரின் அதிகம் நிறைந்துள்ள காய்கறிகள் என்னவென்பதைக் காண்போம்.
பீன்ஸ் பீன்ஸ் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று. இருப்பினும், பீன்ஸை அதிகம் சாப்பிடும் போது, அது உடலில் பியூரின் அளவை அதிகரிக்கிறது. உடலில் பியூரின் அதிகமாகும் போது, யூரிக் அமிலத்தின் அளவும் அதிகரிக்கிறது. அதிலும் ஏற்கனவே உடலில் யூரிக் அமிலம் அதிகம் உள்ளவர்கள், பீன்ஸை அதிகம் சாப்பிடும் போது, அது இன்னும் யூரிக் அமில அளவை அதிகரித்து, மூட்டு வலி பிரச்சனையை தீவிரமாக்கிவிடும்.
பசலைக்கீரை கீரையில் இரும்புச்சத்து, புரோட்டீன் போன்ற இன்றியமையாத சத்துக்கள் உள்ளன. ஆனால் கீரையை அதிகம் உட்கொள்ளும் போது, உடலில் யூரிக் அமிலமும் அதிகரிக்கும். அதுவும் பசலைக்கீரையில் பியூரின் அதிகளவு உள்ளது. இது உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும்.
பட்டாணி பட்டாணி பலரும் விரும்பி சாப்பிடும் காய்கறிகளுள் ஒன்று. அதுவும் உலர்ந்த பட்டாணியில் பியூரின் அதிகம் காணப்படுகிறது. எனவே ஏற்கனவே உடலில் யூரிக் அமிலம் அதிகம் உள்ளவர்கள் உலர்ந்த பட்டாணியை சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், அது மூட்டு பிரச்சனைகளை இன்னும் தீவிரமாக்கிவிடும்.
காளான் அசைவ உணவுகளை சாப்பிடாதவர்களுக்கு சிறந்த மாற்றாக காளான் விளங்குகிறது. ஆனால் காளானில் பியூரின்கள் அதிகளவில் உள்ளது. எனவே உங்களுக்கு மூட்டு தொடர்பான பிரச்சனைகளை இருந்தால் அல்லது யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் காளானை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
கத்தரிக்காய் நீங்கள் கத்திரிக்காய் பிரியரா? அடிக்கடி கத்திரிக்காயை உணவில் சேர்ப்பீர்களா? அதே சமயம் உங்களுக்கு மூட்டு பிரச்சனைகள் உள்ளதா? அப்படியானால் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். ஏனெனில் கத்திரிக்காய் உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கும். இது தவிர கத்திரிக்காய் உடலில் அழற்சியை அதிகரிக்கும்.
சேப்பக்கிழங்கு சேப்பக்கிழங்கில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் இருந்தாலும், இவற்றை அதிகளவில் உட்கொள்ளும் போது, அது உடலில் யூரிக் அமில அளவை அதிகரித்து, மூட்டு வலி மற்றும் மூட்டு விறைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.