fbpx

நீங்கள் ஆரோக்கியமாக இருக்க நினைக்கிறீர்களா..? அப்படினா இந்த 3 பழக்கங்களை மறந்துறாதீங்க..!!

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நிறைய பேருக்கு ஆரோக்கியம் குறித்த அக்கறை அதிகரித்திருக்கிறது. தினசரி ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதன் அவசியத்தை பலரும் இந்த சமயத்தில் புரிந்துகொண்டுள்ளனர். ஆனாலும், ஆரோக்கியம் குறித்த தீர்மானங்களை செயல்படுத்துவதில் பலர் தவறிவிடுகின்றனர். சில எளிய பழக்கவழக்க மாற்றங்கள் கூட ஆரோக்கியமாக இருக்க உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இயற்கை உணவுகள்

சில உணவுகளை சமைத்தோ, பதபடுத்தியோ சாப்பிடுவதைவிட அப்படியே நேரடியாக சாப்பிடுவது சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.அதாவது ஜூஸாக குடிப்பதைவிட பழங்களை அப்படியே சாப்பிடலாம். முடிந்தவரை காய்கறிகளையும்கூட அரை வேக்காடகவே சாப்பிடலாம். முற்றிலும் சமைத்தோ, மசித்தோ மசாலாக்களை சேர்த்து சாப்பிடுவதைவிட இது மிகவும் சிறந்தது. காய்கறிகள் மற்றும் முட்டைகோஸ் போன்றவற்றை சுவைக்காக சமைத்து சாப்பிடும்போது அதில் சிறிது தேங்காயை சேர்த்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் வெங்காயம், குடை மிளகாயையும் சேர்த்து சாப்பிடலாம்.

15 நிமிட உடற்பயிற்சி அவசியம்

தினசரி குறைந்தது 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதனை தினசரி பழக்கமாக்கி கொள்வது சிறந்தது. கார்டியோ மற்றும் யோகா பயிற்சிகளை தவிர பிற உடற்பயிற்சிகளும் தேவை. எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் உடற்பயிற்சிகள் உடல் கட்டமைப்பை பராமரிக்க உதவும்.

சப்ளிமெண்ட்ஸ்

சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளாததால் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுகிறது. எனவே, உணவு பழக்கங்களை முறையாக கடைபிடிக்க இயலாதவர்கள் வைட்டமின் ஏ, பி, சி, டி, இ மற்றும் ஜிங்க் போன்றவற்றை எடுத்துக்கொள்வது அவசியம் என்றும் கூறுகின்றனர். ஆனால், அவை மருத்துவரின் பரிந்துரையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

Chella

Next Post

’இந்த மருந்துகளை இனி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்’..!! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை..!!

Thu Jan 12 , 2023
மரியான் பயோடெக் நிறுவனத்தின் 2 இருமல் மருந்துகளை இனி குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்திய தயாரிப்பு நிறுவனமான மரியான் பயோடெக் உற்பத்தி செய்யும் ஆம்ப்ரோனால் மற்றும் டாக் 1 (Doc-1 Max) ஆகிய இரண்டு இருமல் மருந்தை உட்கொண்ட 19 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்தது. அதாவது குழந்தைகள் அதிகப்படியான இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதாலும், அந்த மருந்துகளில் எத்திலீன் […]

You May Like