fbpx

கண் பார்வையை மேம்படுத்த வேண்டுமா..? அப்ப உடனே இதை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க…

இன்றைய காலகட்டத்தில் கண்பார்வை குறைபாடு என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. இப்போதெல்லாம், அதிக நேரம் டிவி பார்ப்பது அல்லது சமூக ஊடகங்களில் மணிநேரம் செலவிடுவது கண்களை மோசமாக பாதிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கண்களை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்வது மிகவும் அவசியம், அதனால் கண் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

கேரட், முட்டை, கீரைகள், காய்கறிகளை சாப்பிடுவதால் கண்பார்வை மேம்படும். இந்த பொருட்களில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது. இதே போல் மீன், சோயா பீன்ஸ், வால்நட், முந்திரி, வேர்கடலை ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.. இதில் கண்பார்வைக்கு தேவையான அமிலங்கள் உள்ளன.. நெல்லிக்காய் சாப்பிடுவதும் கண்களை பலப்படுத்துகிறது. இதில் நல்ல அளவு வைட்டமின்கள், தாதுக்கள், பாஸ்பேட்டுகள் உள்ளன.

முட்டைக்கோஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதுடன், கண் பார்வையையும் மேம்படுத்த உதவுகிறது. வைட்டமின் சி நிறைந்துள்ள பழங்களை உட்கொள்வதும் கண் பார்வையை மேம்படுத்த உதவும்.. எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றை சாப்பிட வேண்டும்… முட்டையில் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் சத்துகள் நிறைந்துள்ளன. இது வயது தொடர்பான பார்வை இழப்பு அபாயத்தைக் குறைக்கும். வைட்டமின் சி மற்றும் ஈ மற்றும் துத்தநாகமும் முட்டையில் நிறைந்துள்ளது..

இதனுடன் அதிகமாக தண்ணீர் குடிப்பதும், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பழ ஜூஸ்களை அருந்துவதும் கண்களுக்கு நல்ல பலனைத் தரும். மேலும், நல்ல தூக்கமும் கண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.. இரவில் நீண்ட நேரம் விழித்திருக்காமல், 7-8 மணி நேரம் தூங்குவது கண்களுக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்..

Maha

Next Post

HDFC வங்கியில் பல்வேறு காலிப்பணியிடங்கள்...! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்...!

Sat Sep 24 , 2022
HDFC வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Senior Corporate Agency Manager பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 38 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு தொடர்புடைய ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 4 […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like