fbpx

அதிர்ச்சி.! கிரீன் டீ குடிப்பது உடலுக்கு தீமையை ஏற்படுத்துமா? மருத்துவர்கள் எச்சரிக்கை.!?

பொதுவாக நம்மில் பலரும் தினமும் காலையில் எழுந்ததும் தேநீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்போம். பலருக்கும் காலையில் தேநீர் குடிப்பது அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பை ஏற்படுத்தும் என்று கருதி வருகின்றனர். ஆனால் அதிக அளவு தேநீர் குடிப்பது உடலுக்கு தீமையை ஏற்படுத்தும் என்று கருதி தற்போதுள்ள காலகட்டத்தில் ஒரு சிலர் மூலிகைகளினாலான கிரீன் டீயை குடித்து வருகிறார்கள்.

மேலும் இந்த கிரீன் டீ உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட்களை அதிகம் கொண்டுள்ளதாகவும், உடல் எடையை குறைப்பதற்கு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது என பல நன்மைகளை உடலில் ஏற்படுத்துவதாக பலர் கருதி வருகின்றனர்.

ஆனால் கிரீன் டீயை விட நாம் சாதாரணமாக குடிக்கும் பிளாக் டீ, இஞ்சி டீ, புதினா டீ போன்றவற்றில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. கிரீன் டீயின் ஆன்ட்டி ஆக்சிடென்ட் லெவல் 1.5 மில்லி மோல் அளவு உள்ளது. ஆனால் நாம் சாதாரணமாக குடிக்கும் பால் காபியில் 3 மி. மோல், இஞ்சியில் 20 மி. மோல், பிளாக் காபியில் 15 மி. மோல், புதினாவில் 115 மி. மோல், நெல்லிக்காயில் 246 மி. மோல் என கிரீன் டீயை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.

கிரீன் டீயின் மூலிகைகள் இயற்கையாக தயாரிக்கப்பட்டது என்றால் அந்த பச்சை நிறம் எப்படி வந்தது என்பது பலருக்கும் தெரியாது. மேலும் கிரீன் டீ அளவுக்கு அதிகமாக குடித்தால் அதிலுள்ள டானின் என்ற வேதிப்பொருள் நம் உடலில் கலந்து இரும்புச்சத்து குறைபாடு மற்றும் ஹீமோகுளோபின் குறைபாட்டை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

English summary : Does green tea cause harm to the body

Read more : சைவ உணவு பிரியர்களுக்கான தாவர பால்.? இதில் உள்ள நன்மைகள் என்ன.!?

Baskar

Next Post

Lok Sabha Election | நெல்லை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு..? மீண்டும் தட்டிப் பறிக்குமா திமுக..?

Thu Feb 22 , 2024
நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் கிராமப்புறப் பகுதிகளே அதிகம். இந்து நாடார், கிறிஸ்துவ நாடார், முக்குலத்தோர், யாதவர், பட்டியலினத்தவர், வேளாளர், இஸ்லாமியர்கள் எனப் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து வாழும் இந்தத் தொகுதியில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். நெல்லை எம்பி ஞானதிரவியம் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம். […]

You May Like