fbpx

உங்களுக்கு பூண்டு பிடிக்காதா..? எல்லா நன்மைகளும் அதுல தான் இருக்கு..!! இப்படி ட்ரை பண்ணி பாருங்க..!!

நமது உடலில் இரத்த சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துவதில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் அடங்கியுள்ள பல்வேறு நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றங்களே சர்க்கரை நோய் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும். ஆனால் முன்னெச்சரிக்கைகள் மற்றும் முறையான உணவு முறைகளை பின்பற்றினால் இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். அந்தவகையில் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் பூண்டில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. வைட்டமின் பி 6, வைட்டமின் சி, துத்தநாகம், நார்ச்சத்துக்கள், கால்சியம், மெக்னீசியம், செலினியம், மாங்கனீசு ஆகிய சத்துக்கள் பூண்டில் அதிகம் காணப்படுகின்றன.பூண்டில் உள்ள சத்துக்கள் ஆற்றலை அதிகரித்து கூடுதல் கலோரிகளை எரிக்கிறது. இதனால் எடை இழப்பு ஏற்படும். பசும்பாலில் பூண்டை கொதிக்க வைத்து இரவில் தினமும் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை குறையும். காலையில் வெறும் வயிற்றில் பூண்டு உண்பது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்க உதவும். பூண்டில் இருக்கும் அலிசின் என்ற பொருள் கணையத்தின் செயல்பாட்டை தூண்டி விடுகிறது. மேலும், உடலுக்கு தேவையான இன்சுலின் சுரப்பு அதிகரிக்க உதவுகிறது. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து பாலியல் உறவை மேம்படுத்தும் ஆற்றல் பூண்டிற்கு உள்ளது. சளி, இருமல், காய்ச்சல் ஆகிய பாதிப்புகளிலிருந்து விடுதலை பெற பூண்டை பச்சையாக சாப்பிடலாம்.
செரிமானம், மாதவிடாய் பிரச்சனை, எலும்புகள் உறுதியற்றதன்மை, மனச்சோர்வு ஆகியவற்றை பூண்டு சரி செய்கிறது.

Kokila

Next Post

அதிக நேரம் ஸ்மார்ட் போன் பார்த்தால் ஆயுள் குறைந்திடும்!....அதிர்ச்சி ரிப்போர்ட்!

Fri Feb 3 , 2023
அதிக நேரம் ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பயன்படுத்தினால் விரைவில் வயதான தோற்றம் வந்துவிடும் என்று ஆராய்ச்சி ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கையும், அழைப்புகளின்போது பேசும் கால அளவும் பன்மடங்காக அதிகரித்துள்ளது. வாட்ஸ்அப் உரையாடல் தொடங்கி, செய்திகளை நொடிக்கு நொடி வழங்குவது, வங்கி பணப் பரிவர்த்தனை என அனைத்துக்கும் ஆதாரமாகிவிட்டது செல்போன். இதனை பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை மிக மிகக் […]

You May Like