நாள்தோறும் பச்சை ஆப்பிள் உட்கொள்வதால், உடல் உறுப்புகளை பலப்படுத்தும், இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றது.
சிவப்பு ஆப்பிள்கள் தான் அதிகளவு மக்களால் வாங்கி உண்ணப்படுகின்றன. சிவப்பு நிற ஆப்பிளைவிட, அதிகப்படியான வைட்டமின், மினரல், நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட் என வரிசையாக எல்லா ஊட்டச்சத்துக்களும் பச்சை ஆப்பிளில் இருக்கின்றது. அதிக இனிப்பும் சற்று புளிப்பும் நிறைந்துள்ள இந்த பச்சை ஆப்பிள், நம் உடலில் எதிர்ப்பு சக்தியை மிக வேகமாக அதிகரித்து, ஆரோக்கியத்தையும் அழகையும் தருகின்றன. இவை குடலின் இயக்கத் தைச் சீராக்கி. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் நச்சுத்தன்மையை நீக்குவதில் மிகச்சிறப்பாக செயலாற்றுகிறது. உடலில் செரிமான சக்தியை பலப்படுத்தவும், உடலில் இருக்கும் கொழுப்பை வெளியேற்ற இந்த பச்சை ஆப்பிள் உறுதுணையாக உள்ளது.
மேலும், உடலில் இரத்த நாளங்களில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை வெளியேற்றி, நரம்பியல் கோளாறுகள், அல்சைமர் என்னும் மறதி நோயை உண்டாவதைத் தடுக்கவும் இந்த பச்சை ஆப்பிள் உதவுகிறது. தினந்தோறும் இதை சாப்பிடுவதன் மூலம் பற்களும் எலும்புகளும் வலுவாக இருக்கும். புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் ஆப் பிளை தினமும் எடுத்துகொண்டால் உங்கள் நுரையீரல் பாதிப்படையாமல் பாதுகாக்கலாம். அதிகளவு வைட்டமின்களை உள்ளடக்கிய பச்சை ஆப்பிள் சருமத்தின் நிறத்தையும் மாற்றும் அளவு வல்லமை கொண்டுள்ளது. இதிலிருக்கும் புரதங்களும் சருமத்தின் ஆழம் வரை ஊடுருவி அழுக்கு களை வெளியேற்றி சரும நிறத்தை வளப்படுத்துகிறது. சரும நோய்கள் வராமல் தடுக்கிறது.