இன்றைய காலகட்டத்தில் நம்மில் பெரும்பாலானோர் கண் பார்வை குறைபாட்டால் அவதிப்படுகிறோம். இப்போதெல்லாம் சிறுகுழந்தைகள் கூட கண்ணாடி அணிகின்றதை நாம் காண முடிகிறது. ஆரோக்கியமான சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளாததே இதற்கு காரணம்.
சத்தான உணவுகளை சாப்பிடாததால், நம் கண்கள் பலவீனமடையத் தொடங்குகின்றன, எனவே பலவீனமான கண்களை சரிசெய்ய உதவும் உணவுகள் குறித்து பார்க்கலாம். பச்சை இலைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால், கண்களின் பிரச்சனை பெருமளவு குறைகிறது, ஏனெனில் பச்சை இலைக் காய்கறிகளில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக இருப்பதால், நம் கண்களை வலிமையாக்கி கண்களைப் பாதுகாக்கிறது.
இது தவிர உலர் பழங்கள் மற்றும் பருப்பு வகைகளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், கண் பார்வை அதிகரிக்கிறது, ஏனெனில் பல வகையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நிறைய புரதங்கள் உலர் பழங்களில் இருப்பதால் நம் கண்களுக்கு நல்லது. கேரட் சாப்பிடுவதால் கண் பார்வை திறன் அதிகரிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான்.. கீரை, கேரட் ஜூஸைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், விரைவில் பார்வை குறைபாடு குணமாகும்