fbpx

சர்க்கரை நோயை சரிசெய்யும் வெந்தயம்..!! இப்படி சாப்பிட்டு பாருங்க..!! சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்..!!

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள மோசமான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளினாலும் இந்த சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். சர்க்கரை நோய் வந்துவிட்டாலே காலம் முழுவதும் மருந்து மாத்திரைகள் எடுத்தே ஆக வேண்டும் என்று கருதி வருகிறோம்.

ஆனால், நம் உண்ணும் உணவுகளில் கட்டுப்பாடு மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலமே சர்க்கரை நோயை எளிதாக விரட்டலாம். குறிப்பாக, வீட்டில் சமையலில் பயன்படுத்தும் ஒரு சில பொருட்களை  வைத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எளிதாக கட்டுப்படுத்தலாம் என்று சித்த வைத்திய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வீட்டு வைத்திய மருந்தை எப்படி செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

* வெந்தயம்

* முருங்கை பூ

* கருஞ்சீரகம், துளசி

செய்முறை :

முதலில் முருங்கை பூ மற்றும் துளசியை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து கடாயில் நன்றாக வறுக்க வேண்டும். பின்பு முருங்கைப்பூ, துளசி மற்றும் வெந்தயம், கருஞ்சீரகம் இவற்றை தனித்தனியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த பொடியை காற்று போகாத ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் சுடு தண்ணீரில் போட்டு 1/2 டம்ளர் வரும் அளவிற்கு கொதிக்க விடவும். பின்னர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும் என்று சித்த மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Read More : அதிர்ச்சி..!! 103 மருந்துகள் தரமற்றவை..!! மருந்து தரக்கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு..!! கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு..!!

English Summary

Siddha doctors have advised that you can easily control blood sugar levels by using a few ingredients used in cooking at home.

Chella

Next Post

’வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த கீரையை சாப்பிடுங்க’..!! விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்..!! பிரபல மருத்துவர் கொடுத்த டிப்ஸ்..!!

Tue Apr 1 , 2025
Dr. Mythili has explained the benefits of spinach, which are unknown to many people today.

You May Like