fbpx

இயற்கையான முறையில் குடலை சுத்தம் செய்ய இதை ஃபாலோ பண்ணுங்க..!! எந்த பிரச்சனையும் வராது..!!

எப்பொழுதும் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக காலை கடன் முடிக்க வேண்டும் என்பது தான் சரியான முறையாகும். இதனால் தான் காலை கடன் என்கிற பெயரும் வந்தது. காலையில் எழுந்து மலம் கழிக்கவில்லை என்றாலே, அங்கு உடம்பில் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம் ஆகிறது. இப்படி குடல் சார்ந்த பிரச்சனைகளை முற்றிலுமாக நீக்கக்கூடிய இயற்கையாக கடைபிடிக்க வேண்டிய ஒரு வழிமுறையை தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

குழந்தைகளாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் காலையில் எழுந்ததும் வருகிறதோ இல்லையோ முதலில் மலம் கழிக்க பழகிக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீர் குடித்தால் சுலபமாக காலையில் மலம் கழிக்க முடியும். அதுமட்டுமின்றி, உடம்பில் இருக்கும் கெட்ட கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும். எனவே, காலையில் சூடாக டீ, காபி குடிக்கும் முன்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரை பருகுங்கள்.

மலம் கழிக்கும் வரை காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம். மலம் கழித்த பின்னர் காலை உணவை எடுத்துக் கொள்வது தான் முறையாகும். இப்படி முறை நாம் உணவு பழக்கத்தை கொண்டு வருவதால், நிறையவே பிரச்சனைகளை அனுபவிக்கிறோம். குடல் முழுவதையும் சுத்தம் செய்ய 6 மாதத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் மாத்திரைகள் பள்ளிகளில் மற்றும் மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது.

வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும் என்று தான் முன்னோர்கள் விரதம் என்கிற ஒன்றை கடைபிடித்து வந்தனர். மாதம் ஒரு முறையாவது வயிற்றை பட்டினி போட வேண்டும். குடல் முழுவதும் மட்டும் அல்லாமல் உடல் முழுவதும் சுத்தமாகி புத்துணர்வு பெறுகிறது. ஆனால், இது உங்களால் முடியவில்லை என்றால், வருடம் ஒருமுறை இந்த விஷயத்தை செய்து பாருங்கள். குடல் முழுவதையும் சுத்தம் செய்து விடும். இது முற்றிலும் இயற்கையான முறை என்பதால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை.

கேரட்டில் கூட இல்லாத அளவிற்கு விட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளது சர்க்கரை வள்ளிக்கிழங்கு. இந்த சர்க்கரை வள்ளி கிழங்கை மூணு துண்டுகளாக எடுத்துக் கொள்ளுங்கள். குக்கரில்  தண்ணீர் விட்டு அதன் மீது ஒரு கிண்ணத்தை வையுங்கள். அதனுள் இந்த 3 துண்டு சர்க்கரை வள்ளிக் கிழங்குகளையும் போட்டு அதன் மீது ஒரு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான விளக்கெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். 2 பின்ச் அளவிற்கு மிளகுத்தூள் தூவிக் கொள்ளுங்கள். ஒரு பின்ச் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி நன்கு வேகுமாறு விசில் விட்டுக் கொள்ளுங்கள். பின்னர் இதை நன்கு மசித்து குழந்தைகளுக்கு ஊட்டி விடுங்கள். அதே போல பெரியவர்களும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

குடல் முழுவதையும் சுத்தம் செய்து விடும் ஆற்றல் இதற்கு உண்டு. மேலும், இதில் இருக்கும் விட்டமின்கள் மீண்டும் மலச்சிக்கல் வராமல் உங்களை பாதுகாக்கும். 6 மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் இதை எடுத்துக் கொண்டால் இயற்கையான முறையில் நம்முடைய குடலையும், உடலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும். மலச்சிக்கல் பிரச்சனைக்கு முற்றிலுமாக குட்பை சொல்லி ஆரோக்கியமாக இருக்க இதை நீங்களும் முயற்சிக்கலாமே..

Read More : மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டிய கணவன்..!! எலும்பு, சதையை குக்கரில் போட்டு வேகவைத்த அதிர்ச்சி சம்பவம்..!!

English Summary

You too can try this to completely say goodbye to constipation and stay healthy.

Chella

Next Post

உங்க குழந்தைக்கு பசியே இல்லையா? அப்போ வாரம் ஒரு முறை இந்த கீரையை குடுங்க..

Fri Jan 24 , 2025
spinach that trigger hunger in kids

You May Like