fbpx

ஆப்பிளுக்கு இணையான நெல்லிக்கனி … தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது. நெல்ல ஒரு  நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம் என்கின்றார்கள் உணவு ஆராய்ச்சியாளர்கள்.

நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற  இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். 

வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு. உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். 

நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக  அதிகம். 

நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை  அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும்  பயன்படுத்தப்படுகிறது.

தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக  உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

எப்போது சாப்பிடலாம்.. நெல்லிக்காய் ஜூஸை சுடு தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் காலை வேளையில் குடித்து வரலாம். லேகிய வகைகளின் முக்கிய மூலப் பொருளாக நெல்லிக்காய் உள்ளது. இதை, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக, ஒரு தேக்கரண்டி அளவுக்கு சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

Next Post

கரு , கரு நீளமான கூந்தல் .. இந்த ஒரு பொருள் போதும் …!!

Thu Oct 20 , 2022
அடர்த்தியான தலைமுடியுடன், கருகருவென தலைமுடி இருக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. நவீன வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு கலாச்சாரத்தால் தலைமுடி மிகவும் பாதிக்கப்படும் நிலையில் உங்கள் கூந்தலை அழகாக மாற்றியமைக்க நீங்கள் கறிவேப்பிலையை பயன்படுத்தலாம். இது அடர்த்தியான கூந்தலையும் கருமை நிறத்தையும் கொடுக்கும். அதை இந்த பதிப்பில் பார்க்கலாம். இன்று உணவுகளில் அதிகமாக இராசயனங்கள் அதிகரித்து வருகிறது. இது உடல் நலத்தை மட்டுமல்லாமல் தலைமுடியையும் கூட பாதிக்கிறது. அதனால் […]

You May Like