உடலுக்கு தேவைப்படும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது தான் கருப்பு கவுனி அரிசி. இதில் பொங்கல் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். கருப்பு கவுனி அரிசி பொங்கல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
முதலில் கருப்பு கவனி அரிசியை நன்கு கழுவி 3 மணி நேரத்திற்கு முன்பாகவே ஊற வைக்க வேண்டும். இந்த அரிசி வேகுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். பின்பு பாசிப்பருப்பை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் பாலுடன் 5 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்ட வேண்டும். அதில் கருப்பு கவுனி அரிசியை சேர்க்க வேண்டும். அரிசி ஒரு அளவிற்கு வெந்த பின்பு அதில் ஊற வைத்த பாசிப்பருப்பை சேர்த்துக் கொள்ளலாம்.
அரிசி மற்றும் பருப்பு இரண்டும் நன்றாக வெந்து குழைந்து வரும் நேரத்தில் துருவிய வெல்லத்தை சேர்க்க வேண்டும். வெல்லம் அரிசி மற்றும் பருப்புடன் நன்றாக குழையும் வரை வேக விட வேண்டும். பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நெய்யில் வதக்கி எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே கடாயில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வதக்க வேண்டும். பின்பு தேங்காய், உலர் திராட்சை, முந்திரி பருப்பு மூன்றையும் பொங்கலில் சேர்த்து கலந்து விடவும். இறுதியாக ஏலக்காய் பொடி, பச்சை கற்பூரம் சிறிதளவு தூவி இறக்கினால் ஊட்டச்சத்து மிகுந்த கருப்பு கவுனி அரிசி பொங்கல் ரெடி.