fbpx

இனி ஹேர் டை தேவையில்லை .! நரை முடியை கருப்பாக்க இந்த ஒரு பொருள் போதும்.!?

பொதுவாக அந்த காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே முடி நரைக்கும். ஆனால் தற்போது இளம் வயதினருக்கும் நரைமுடி பிரச்சனை அதிகமாகிவிட்டது. இதற்கு தற்போதுள்ள கால சூழ்நிலைகளும், உணவு பழக்க வழக்கமும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதனால் இளைஞர்கள் தன்னம்பிக்கையின்றி இருக்கின்றனர்.

எனவே பலரும் கடைகளில் இருக்கும் ஹேர் டை வாங்கி உபயோகப்படுத்தி வருகின்றனர். இது உடலில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தி முடி உதிரச் செய்து வழுக்கையாக வைக்கிறது. இந்த பாதிப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கும் ஒரு இலையை வைத்து இயற்கையாக முடியை கருப்பாக்கலாம். இதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

ஹேர் டை செய்ய தேவையான பொருட்கள்
கற்பூரவல்லி இலை, அவுரி இலை, நெல்லி பொடி, தேங்காய் பால், மருதாணி இலை

முதலில் மருதாணி இலை மற்றும் அவுரி இலைகளை காய வைத்து பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு கற்பூரவள்ளி இலையை இடித்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் அவுரி மற்றும் மருதாணி இலை பொடி மூணு டேபிள் ஸ்பூன் மற்றும் கற்பூரவள்ளி சாறு இரண்டு டேபிள் ஸ்பூன், நெல்லி பொடி இரண்டு டேபிள் ஸ்பூன், தேங்காய் பால் மூன்று டேபிள் ஸ்பூன் போன்றவற்றை சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை தினமும் காலையில் குளிப்பதற்கு முன்பு தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்து குளித்து வர வேண்டும். இவ்வாறு தேய்த்து குளித்து வந்தால் நரைமுடியை பக்கவிளைவுகளின்றி எளிதாக கருப்பாக்கலாம்.

English summary: homemade hair dye for gray hair

Read more : சைனஸ் தொல்லையா.! தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு இதை செய்து பாருங்கள்.!?

Rupa

Next Post

வாஸ்து டிப்ஸ் : மணி பிளான்ட்டுக்கு அடுத்தபடியாக செல்வத்தை அதிகரிக்கும் அற்புத செடி.!?

Tue Feb 27 , 2024
பொதுவாக வாஸ்து சாஸ்திரத்தில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், செல்வத்தை அதிகரிப்பதற்கும், வெற்றியடைவதற்கும் பல வழிகளை குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் ஒன்று வீட்டில் மணி பிளான்ட் செடியை வளர்ப்பதன் மூலம் செல்வத்தை அதிகரிப்பதற்கான வழியை கூறியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக உள்ளது இந்த சங்கு பூ செடி. இந்த சங்குப்பூ செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம் நேர்மறையான ஆற்றலை அதிகரித்து, பணவரவு பெருகும் என்ற ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளை, நீலம் என பல வண்ணங்களில் […]

You May Like