நவீன காலகட்டத்தில் அழகை மேம்படுத்த பலவிதமான முயற்சிகளை பெண்களும், ஆண்களும் செய்து வருகின்றனர். முகப்பொலிவை மேம்படுத்த பல வகையான டிரீட்மென்களிலும், பியூட்டி பார்லர்களிலும் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
நம் உணவு பழக்க வழக்கங்களும், மாசு நிறைந்த சுற்றுச்சூழல்களுமே இதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றது. எனவே சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமும் மாஸ்டரைசர்கள், சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் லோசன்கள் மூலமாகவும் அழகை பாதுகாத்து வரலாம்.
மேலும் வீட்டிலேயே முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள அதிமதுரம் ஒன்றே போதுமானதாக உள்ளது. இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம் வாங்க?
அதிமதுர பொடி, தேன், கடலை மாவு, போன்றவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு பேஸ்ட் போல் செய்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இதனை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் வரை மசாஜ் செய்து வர வேண்டும். பின்பு குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவலாம். இவ்வாறு 30 நாட்களுக்கு செய்து வர முகம் பொலிவுற்று அழகு மேம்படும்.