fbpx

உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க இந்த பொருட்கள் போதுமா..!

உடலில் இருக்கும் அதிகப்படியான தேவையற்ற கெட்ட கொலஸ்ட்ரால் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அளவிற்கு பாதிப்பை தரும். அத்துடன் பல நாள்பட்ட நோய்களுக்கு அது வழிவகுக்கும்.

அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பதால் தமனி சுவர்களின் உள்ளே பிளேக் ஆக குவிகிறது. இதனால் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களுக்கான ஆபத்தை இது விரைவில் ஏற்படுத்தி விடுகிறது. மஞ்சள் என்பது பழங்கால ஆயுர்வேதம்.

இதில் பல ஆரோக்கிய நன்மைகள் மறைந்துள்ளது. குர்குமின் எனப்படும் ஒரு சிறந்த சக்திவாய்ந்த சேர்மத்தை இது கொண்டுள்ளது. மஞ்சளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நாள்பட்ட குடல் பிரச்சினைகள், அழற்சி நுரையீரல் நோய்கள், கணைய அழற்சி, இதய நோய்கள் ஆகிய உடல்நலக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 

மேலும் உடலுக்கு கேடு விளைவிக்கின்ற கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க குர்குமின் மிகவும் உதவுகிறது. இலவங்கப்பட்டை எனபது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதனை மசாலாப் பொருளாக அறியப்பட்டிருக்கிறோம். ஆனால் இது குடல் பிரச்சினைகள்,

இரத்த ஓட்ட சீரமைப்பு மற்றும் உடலைத் தெளிவாக வைத்திருக்கிறது. இதில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இயற்கையான இன்சுலின் உற்பத்தியின் அளவை அதிகரிக்கிறது. 

Baskar

Next Post

பாகற்காயில் இந்த அபாயம் இருக்கிறதா..!

Wed Nov 30 , 2022
என்னதான் காய்கறிகளில் அளவுகடந்த சத்துக்கள் நிறைந்திருந்தாலும் சில தீமைகளும் அதில் இருக்கதான் செய்கிறது. இதனை சரியான முறையில் எடுத்துக் கொ‌ண்டா‌ல் அதிலிருந்து விடுபடலாம்.  இந்த வகையில் கசப்பாக இருந்தாலும் பல நன்மைகள் பாகற்காயில் உள்ளது. ஆனால் அதில் இருக்கும் சில கசப்பான தீமைகளும் இருக்கிறது. பாகற்காய் பிரியர்கள் குறிப்பிட்ட அளவு சரியாக உட்கொள்ளாமல் அளவுக்கதிகமாக உட்கொள்வதன் காரணத்தினால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி பிரச்சனைகளை உண்டாக்கி விடுகிறது. சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் […]

You May Like