fbpx

Yummy recipes : கேரளா ஸ்டைலில் மொறு மொறு மீன் வருவல்.! ட்ரை பண்ணி பாருங்க.!!

பொதுவாக நம்மில் பலரும் வீடுகளில் மீன் வருவல் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் கேரளா ஸ்டைலில் கொஞ்சம் வித்தியாசமாக மீன் வருவல் இப்படி செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். கேரளா ஸ்டைலில் மீன் வருவல் எப்படி செய்யலாம் என்பதை குறித்து பதிவில் பார்க்கலாம்?

தேவையான பொருட்கள் –
மீன் – 1/2 கிலோ, மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி, கொத்தமல்லி தூள் – 1 1/2 தேக்கரண்டி, ரெட் சில்லி பவுடர் – 1 தேக்கரண்டி, கரம் மசாலா – 3/4 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை –

முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தண்ணீர் போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு இந்த கலவையில் மீன் போட்டு மசாலாவுடன் நன்றாக பிரட்டி எடுத்து 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

பின்பு ஒரு தோசை கல்லில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கருவேப்பிலை போட்டு நன்றாக பொறிந்து வந்த பின்பு கருவேப்பிலையை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு மீன் துண்டுகளை போட்டு பொறிக்க வேண்டும். நன்றாக பொரித்த பின்பு மீன் துண்டுகள் மீது வறுத்த கருவேப்பிலை தூவி பரிமாறினால் சுவையான மொறு மொறு கேரளா ஸ்டைல் மீன் வருவல் தயார்.

English summary : yummy recipes about kerala style fish fry

Read more :


Baskar

Next Post

குடல் புண்களை ஆற்றும் மருத்துவ குணம் கொண்ட பச்சை வாழைப்பழம்.! எப்படி பயன்படுத்தலாம்.!?

Wed Feb 28 , 2024
நாம் உண்ணும் உணவுகளை செரிப்பதற்கும், உணவுகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்தடுத்து உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்புவதற்கு  முக்கிய கடத்தியாக குடல் உள்ளது. நாம் உண்ணும் உணவுகளை ஜீரணப்பதற்கு வயிற்றில் ஒரு வகையான அமிலம் சுரக்கும். இந்த அமிலங்கள் அதிகப்படியாக சுரப்பதாலும், நச்சுகள் தேங்குவதாலும் வயிற்றில் புண் ஏற்படுகிறது. இதனையே அல்சர் என்று குறிப்பிடுகிறோம். குடலின் உட்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த புண்களை சரி செய்வதற்கும், அதிகப்படியான அமிலத்தை சீர்படுத்துவதற்கும் பல மருந்துகள் […]

You May Like