fbpx

புதினாவுடன் இஞ்சி சேர்த்து சாப்பிட்டா உடலில் நடக்கும் அதிசயம்…!

புதினாவில் அதிக அளவு சத்துக்கள் அடங்கியுள்ளது. புதினாவை ஒரு வகையான கீரை என்றும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் ஒரு மருத்துவ பொருள் என்றும் கூறலாம்.

புதினாவில் புரோட்டீன், நீர்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் எ, அயர்ன், நிக்கோடின் ஆக்ஸீட் மற்றும் டைமின் என பலவகையான சத்துக்கள் இதில் அதிக அளவு உள்ளது. புதினா சட்னி, புதினா ஜூஸ், புதினா டீ, புதினா கசாயம், புதினா சூப் என எவ்வாறு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதினாவை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். இதில் எலுமிச்சை ஜுஸ் கலந்து குடித்து வந்தால் பித்தம் குறையும். புதினா அதிக அளவு கொழுப்பை குறைக்கிறது. எனவே, உடல் எடையை குறைப்பதற்கு புதினா பெரிதும் உதவுகிறது.

கற்பிணி பெண்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தி இருக்கும். இதில் இருந்து விடுபட புதினாவை துவையல் செய்து சாப்பிட்டாலே போதுமானது. புதினாவோடு இஞ்சி சாறு, எலுமிச்சை ஜுஸ், உப்பு போன்றவற்றோடு சிறிது தண்ணீர் சேர்த்துக் குடித்து வந்தால் செரிமான பிரச்சனை குணமாகும்.பல் மற்றும் வாய் பிரச்சனைகளை குணப்படுத்த புதினா பெரிதும் உதவுகிறது. புதினாவை வாயில் போட்டு மென்றால் போதுமானது, வாய் பிரச்சனைகளைக் குணமாக்கும்.

உடல் எடையைக் குறைக்க புதினா அதிக அளவு பயன்படுகிறது. புதினாவை அரைத்து போஸ்ட் செய்து பற்களில் தேய்த்து பல் துலக்கலாம். வீசிங் பிரச்சனை உள்ளவர்கள் புதினாவை உணவில் சேர்த்துக் கொள்வது அதிக நன்மையைக் கொடுக்கும்.

புதினா டீ குடித்தாலே வரட்டு இருமல் குணமாகும். எனவே, வரட்டு இருமல் இருப்பவர்கள் புதினாவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும், சிறுநீரகப் பிரச்சனை மற்றும் முகப்பரு பிரச்சனை ஆகியவற்றையும் குணப்படுத்த பெரிதும் உதவுகிறது.

அஜீரண கோளாறு, வயிறு உபாதைகள் உள்ளவர்கள் புதினா – இஞ்சி ரசம் செய்து சாப்பிடலாம். இந்த ரசத்தை சூப் போன்று அருந்தலாம். இதன் செய்முறையை பார்க்கலாம். கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சுத்தம் செய்த புதினாவை போட்டு வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

அதனுடன் மோர், உப்பு, ஓமம், பெருங்காயத்தூள், இஞ்சிச் சாறு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த வைத்த கலவையை ஊற்றி கொதி வரும் முன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

Next Post

சூப்பர்...! IAS, IPS தேர்வுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி...! வரும் 13-ம் தேதி 17 மாவட்டத்தில் தேர்வு...! முழு விவரம்...

Fri Nov 11 , 2022
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் 2023-ம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி பெறுவதற்கான தகுதித்தேர்வு வருகின்ற நாளை மறுநாள் நடைபெற உள்ளது என அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப்பயிற்சி மையம் தெரிவித்துள்ளது . இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு; தமிழ்நாட்டைச்சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையிலுள்ள அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்திலும், கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா […]

You May Like