நம் அன்றாட உணவு பழக்கங்களின் மூலம் நம் உடலில் பல நச்சுக்களும், தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களும் சேர்ந்துவிடும். இவற்றை தானாகவே நம் உடல் சுத்தப்படுத்தி வெளியேற்றி விடும். அவ்வாறு வெளியேறாத நச்சுக்களை எப்படி உடலில் இருந்து வெளியேற்றி டீடாக்ஸ் செய்யலாம் என்பதை தற்போது பார்க்கலாம். நம் உடலில் உள்ள உறுப்புகளான சிறுநீரகங்கள், நுரையீரல், பெருங்குடல், வியர்வை சுரப்பிகள் போன்றவை இயற்கையாகவே உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி விடும். மேலும் ஒரு சில உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நச்சுப் பொருட்களை வெளியேற்றலாம்.
எலுமிச்சை : வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்கள் அதிகம் நிரம்பி இருக்கும் எலுமிச்சையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் கல்லீரலின் வேலையை அதிகரிக்கச் செய்து நச்சுக்களை வெளியேற்றலாம்.
இஞ்சி மற்றும் பூண்டு : இதை உணவில் சேர்த்துக் கொண்டால் செரிமான பிரச்சனைகளை சரி செய்து பெருங்குடலின் வேலையை எளிதாக்கும்.
பீட்ரூட் : இதை சாறாகவோ அல்லது உணவிலோ சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தை சுத்தப்படுத்தி வியர்வை மூலம் கழிவுகளை வெளியேற்ற செய்யும்.
மஞ்சள் : இது இயற்கையான கிருமி நாசினியாக செயல்படுகிறது. இதனால் உடலில் ஏற்படும் அரிப்பு மற்றும் அலர்ஜி போன்ற பிரச்சனைகளை சரி செய்து தோலில் வியர்வை சுரப்பிகள் சிறப்பாக செயல்பட உதவும்.
Read More : அமைச்சர்கள் தற்குறியா..? அண்ணாமலையை விளாசிய அமைச்சர்..!! முதல்வரை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை..!!