வெள்ளரிக்காய் என்பது குளிர்ச்சிக்காக சாப்பிடும் ஒரு பொருளாக தான் முதலில் இருந்தது. ஆனால் அதன் பிறகு அந்த வெள்ளரிக்காய் அழகு சாதன பொருளாகவும் மாறிப்போனது. இந்த வெள்ளரிக்காய் நீர் சத்து உடைய ஒரு பொருளாகும். ஆகவே நீர் சத்து குறைவாக இருப்பவர்கள் இந்த வெள்ளரிக்காயை சாப்பிடுவது நன்மையை வழங்கும்.
ஆனால் வெள்ளரிக்காயை உணவுடன் பச்சையாக நீங்கள் சாப்பிடுவீர்கள் என்றால் இந்த தகவல் உங்களுக்கானது தான். அதிலும் குறிப்பாக வெள்ளரிக்காய் என்பது உடலுக்கு மிகவும் நல்லது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் வெள்ளரிக்காயை தேர்வு செய்வது அவசியம்.
இந்த வெள்ளரிக்காயில் அதீத சத்துக்கள் இருப்பது உண்மைதான் அத்துடன் இந்த வெள்ளரிக்காயின் விலையும் மிக குறைவு தான். இருந்தாலும் அதனை உணவுடன் சேர்த்து உண்ணும் போது அஜீரணம் தொடர்பான கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த வெள்ளரிக்காயில் இருக்கும் ஒருவகை சத்து அஜீரணத்தை உண்டாக்குகிறது. ஆகவே இதனை சமைத்த உணவுடன் சாப்பிடுவது என்பது உடலுக்கு நல்லது இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த குறிப்பிட்ட வகை சத்து, வெள்ளரிக்காயின் அடியில் உள்ளது. இதன் காரணமாக, வெள்ளரிக்காயில் உப்பு தடவி உட்கொண்டால் அஜீரணம் உண்டாகாமல் தடுத்து விடுகிறது. அதோடு ஜீரணம் சிக்கல் இருக்கும் நபர்கள் வெள்ளரிக்காயை சாப்பிடாமல் இருப்பது மிகவும் அவசியம்.