fbpx

அன்னாசிப் பூவில் இவ்வளவு மருத்துவப் பயன்களா? .. உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா … ட்ரை பண்ணுங்க…

நாம் உணவில் பயன்படுத்தும் அன்னாசிப் பூவில் ஏராளமான பயன்கள் உள்ளன. ஒரு பூவிலேயே இவ்வளவு நன்மைகள் என்றால் . ஒன்று போதுமே நாம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள..

வாயு பிரச்சனை அன்னாசிப் பூவில் சற்று இனிப்பு சுவை கொண்டது. இதை உணவில் சேர்ப்பதன் மூலமாக நமக்கு இரண்டு வகையான ருசியை தருகிறது. மேலும் வாயு பிரச்சனையை முழுமையாக குறைத்து நமது உணவை மிக எளிதில் செரிமானம் செய்வதற்கு உதவுகிறது. இந்தியாவில் சுமார் 23% மக்கள் வாயு மற்றும் செரிமானப் பிரச்சனைகளில் தவித்து வருகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அண்ணாச்சி பூ மிகப்பெரிய தீர்வாக இருக்கும்.

நரம்பு பிரச்சினை நீங்கும்உடல்நிலை பிரச்சனையால் அவதிப்படும் குழந்தைகளுக்கும் அன்னாசிப்பூ கொண்டு செய்யப்பட்ட கஷாயத்தை கொடுக்கிறார்கள். துருக்கி, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் உணவு செரிமானத்திற்கு அன்னாசிப் பூ அதிகமாக பயன்படுத்தபட்டு வருகிறது. வாந்தி, குமட்டல், வலிப்பு, போன்றவற்றை தடுத்து நரம்பு சம்பந்தமணா பிரச்சனைகளை குணப்படுத்தி ஆரோக்கியத்தை அதிகரிக்க அண்ணாச்சி பூ உதவுகிறது.

வைரஸ் எதிர்ப்பு மருந்து வைரஸ் கிருமியை அழிக்கக்கூடிய மருந்தான ‘ஷிகிமிக் அமிலம்’ அன்னாசிப் பூவில் உள்ளது. பன்றிக் காய்ச்சலுக்குத் தரப்படும் டாமிபுளு மாத்திரைகள் அன்னாசிப்பூவில் இருந்து தான் தயாரிக்கப்படுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அன்னாசிப் பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. இதில் பாக்டீரியா வைரஸ், பூஞ்சை மற்றும் ஈஸ்ட் இனங்களைக் கொல்லும் பய ஆக்டிவ் பொருட்கள் உள்ளது. இந்த எதிர்ப்பு பண்பினால் நம் உடலில் எந்த ஒரு தொற்றுக்களும் ஏற்படாமல் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அண்ணாச்சி பூ உதவுகிறது. நம் உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக அகற்றி நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது இந்த அன்னாச்சி பூ.

புளித்த ஏப்பம் தீரும் ஒரு சிலருக்கு புளித்த ஏப்பம் உருவாகும். இது அவர்களுக்கு அசௌகரியத்தை உருவாக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு அன்னாசி பூ சிறந்த தீர்வாக இருக்கும். அன்னாசிப் பூவை பொடி செய்து அரை கிராம் அளவு எடுத்து  தினந்தோறும் மூன்று வேளையும் உணவுக்குப் பின் நீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் புளித்த ஏப்பம் உண்டாகாது.

சளி இருமல் பிரச்சனை தீரும் அன்னாசி பூவை வறுத்து பொடி செய்து அரை ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம், மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் சளி, காய்ச்சல், இருமல் போன்றவை குணமாகும்.

தசை வலி குணமாகும் அன்னாசி பூவை வறுத்து பொடி செய்து எடுத்து அதனுடன் விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை தலா 100 மில்லி அளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து தைலமாக காய்ச்சவும். இந்த தைலத்தை தசையில் ஏற்படும் வலிகளுக்கு பயன்படுத்தினால் தசை வலி குணமாகிறது. தசை பிடிப்பை சரிசெய்கிறது. நெற்றியில் தடவும்போது மன இறுக்கத்தை போக்குகிறது.

Next Post

அதிரடி நடவடிக்கை...; தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி கடத்தல்...! அரசு வெளியிட்ட தகவல்...!

Thu Sep 22 , 2022
ரேஷன் அரிசியைக் கடத்த முயன்ற 184 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம், சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் […]

You May Like