பொதுவாக தற்போதுள்ள வேகமான காலகட்டத்தில் பலருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிப்ரஷன் என்ற வார்த்தையை சொல்லாதவர்களே இருக்க முடியாது. ஒரு சிலர் மன அழுத்தம் இல்லாவிட்டால் கூட சாதாரண பிரச்சனைகளுக்கெல்லாம் டிப்ரஷன் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் ஒரு சிலருக்கு இந்த மன அழுத்தம் மிகத் தீவிரமாக இருக்கும். இதனால் இப்பிரச்சனை உள்ளவர்கள் உடலளவிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மன அழுத்தத்திற்கு பல வகையான காரணங்கள் இருக்கின்றன. ஆனால் உடலின் வெப்பநிலை அதிகமாக இருந்தால் மன அழுத்தம் ஏற்படும் என்பது குறித்து தெரியுமா?
உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்போது மன அழுத்தம் ஏற்படுகின்றது. இது குறித்து சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஏழு மாதம் தொடர்ச்சியாக நடத்திய ஆய்வில் உடலின் வெப்பநிலை அதிகமாக இருந்த பலருக்கும் மன அழுத்தம் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் மன அழுத்தத்திற்கும், உடல் வெப்ப நிலைக்கும் ஒரு வகையில் தொடர்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் உடல் வெப்பநிலையை குறைக்கும் உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகளை தேர்ந்தெடுத்து மன அழுத்தம் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக நீராவி குளியல் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் இயற்கையாக வியர்வை வெளியேறி உடல் குளிர்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.