fbpx

மக்களே உஷார்.! பல் துலக்காமல் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் தெரியுமா.!?

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் நோய் நொடி இல்லாமல் வாழ்வது என்பது மிகப்பெரும் சவாலாக இருந்து வருகிறது. மேலும் நம் உடலை நோயில்லாமல் பாதுகாப்பது நம் இன்றியமையாத கடமையாக இருந்து வருகிறது. தற்போதுள்ள மனிதர்களின் மோசமான பழக்கவழக்கங்களாலும், ஊட்டச்சத்து இல்லாத உணவுகளாலும், தவறான வாழ்க்கை முறைகளினாலும் அவர்களின் உடலில் பல நோய்கள் உருவாகின்றன.

குறிப்பாக காலையில் எழுந்தவுடனும், இரவு தூங்குவதற்கு முன்பாகவும் இரு வேளைகளும் பல்துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் இதை பலரும் பின்பற்றுவதில்லை. இரவு சாப்பிடும் உணவு துகள்கள் வாயிலேயே தங்கி விடுகின்றன. மேலும் காலையில் பல் துலக்காமலே பலரும் பெட் காஃபி குடித்து வருகின்றனர்.

இதனால் வாய் ஆரோக்கியம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவ்வாறு பல் துலக்காததினால் வாய் மட்டுமல்லாது, உடல் அளவிலும் மிகப்பெரும் பிரச்சனை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தினமும் இரு வேளைகளிலும் பல் துலக்காவிட்டால் வாய் நாற்றம், பல் சொத்தை, வாய் புண்கள், ஈறுகளில் வீக்கம் போன்ற பல நோய்கள் ஏற்படும்.

இதுவே காலப்போக்கில் நோய் பாதிப்பு தீவிரமடைந்து இதயத்திற்கு செல்லும் நரம்புகள் பலவீனமாகும். இதனால் இதயத்தில் போதுமான அளவு ரத்தம் செல்லாமல் மாரடைப்பு, நெஞ்சு வலி போன்ற இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே தினமும் இரு வேளைகளிலும் பல் துலக்கி வாய் மற்றும் உடலின் ஆரோக்கியத்தை பேணி காப்பது நம் இன்றியமையாத கடமையாக செய்து வர வேண்டும்.

English summary : If you don’t brush your teeth, you will have a heart attack

Read more : தீவிர தலைவலியால் அவதிப்படுறீங்களா.? இதுவும் ஒரு காரணமாக இருக்கும் தெரிஞ்சுக்கோங்க.!?

Rupa

Next Post

Annamalai | விஜயதரணியின் வருகை தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும்..!! குஷியில் அண்ணாமலை..!!

Sat Feb 24 , 2024
விஜயதரணியின் வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணி, டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்து கொண்டார். பிரதமர் மோடியின் சேவை நாட்டுக்கு தேவை என்பதால் அவரது தலைமையை ஏற்று பாஜகவை மேலும் வலுப்படுத்த கட்சியில் இணைந்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி […]

You May Like