பொதுவாக கண்பார்வை என்பது அனைவருக்குமே மிகவும் அவசியமான ஒன்று. கண்பார்வை குறைபாடு ஏற்படும்போது உலகமே இருட்டானது போல் உணர்வு உருவாகும். இந்த கண்பார்வை குறைபாடு, உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகள் இருந்தாலும் ஏற்படுகிறது. மேலும் கண் பார்வை குறைபாடு சரி செய்ய பல மருத்துவங்கள், அறுவை சிகிச்சைகள் என எடுத்துக் கொண்டாலும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்பவர்கள் இந்த சித்த வைத்திய முறையை செய்து பார்க்கலாம்?
தேவையான பொருட்கள்:-
பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு, கற்கண்டு, பெருஞ்சீரகம், கசகசா, பால்
செய்முறை
முதலில் ஒரு டம்ளரில் பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா பருப்புகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் பாதாம், பிஸ்தா, பெருஞ்சீரகம், கசகசா சேர்த்து நன்றாக அரைத்து இறுதியாக கற்கண்டு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பால் காய்ச்சி அரைத்த விழுதுகளையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி, தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் கண் பார்வை குறைபாடு போன்ற கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எளிதில் சரி செய்யலாம்.
மேலும் காய்கறிகள், பழங்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்புகளை கொண்ட மீன்கள், இறைச்சிகள் போன்றவற்றை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு போதுமான அளவு ஊட்டச்சத்து உடலில் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி கண் பார்வை குறைபாடு விரைவில் சரியாகும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.