பொதுவாக நம் உடல் இயங்குவதற்கு நரம்புகள் மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே உடல் சீராக இயங்க வேண்டும் என்றால் நரம்புகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நரம்புகள் ஆரோக்கியமாக இல்லை என்றால் நரம்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் நம் உடலில் ஏற்படும். குறிப்பாக நரம்பு தளர்ச்சி பாதிப்பு என்பது தற்போது இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்கின்றது.
இதற்கு காரணமாக கூறப்படுவது, ஊட்டச்சத்து இல்லாத உணவுகளும், அதிகமாக துரித உணவுகள் உண்பது, மது அருந்துதல், புகைப்பிடிப்பது போன்ற பல காரணங்களினாலும் நரம்பு தளர்ச்சி ஏற்படும். இந்த நரம்புத் தளர்ச்சி பிரச்சனையை எளிதாக நம் பாட்டி வைத்தியம் முறைப்படி வீட்டிலேயே சரி செய்யலாம் எப்படி என்பதை குறித்து பார்க்கலாம்?
1. ஜாதிக்காய் மற்றும் லவங்கம் இரண்டையும் ஒரே அளவில் எடுத்து நன்றாக பொடி செய்து சுடு தண்ணீரில் தினமும் காலை மற்றும் இரவு கலந்து குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி பிரச்சனை குணமாகும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரை ஸ்பூன் வெந்தயத்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து காலையில் குடித்து வர வேண்டும்.
3. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பூனைக்காலி பொடி மற்றும் ஓரிதழ் தாமரை பொடியை சுடு தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை சரியாகும். இவ்வாறு ஒரு சில எளிய பாட்டி வைத்திய முறைகளின் படி ஈசியாக வீட்டிலேயே நரம்பு தளர்ச்சி பிரச்சனையை சரிப்படுத்தலாம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.