தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பலருக்கும் சாதாரண சளி, காய்ச்சல் கூட மிகப்பெரும் தொல்லையை ஏற்படுத்துகிறது. உடலில் சளி அதிகமாகிவிட்டால் இது நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். மேலும் ஒருவருக்கு உடலில் சளி அதிகமாகிவிட்டால் அவை எளிதில் குறையாது.
இவ்வாறு நுரையீரலில் சளி அதிகமாகி மூச்சு விட சிரமப்படுதல், மூக்கடைப்பு, தலைவலி, காய்ச்சல், இருமல் போன்ற பல தொல்லைகள் ஏற்படுகிறது. இது காலப்போக்கில் ஆஸ்துமா, சைனஸ் போன்ற மிகப்பெரும் பாதிப்புகளையும் உருவாக்குகிறது. இதன்படி நுரையீரலில் நாள்பட்ட தேங்கி கிடக்கும் சளியை வெளியேற்றுவதற்கு இந்த வீட்டு வைத்திய முறையை செய்து பாருங்கள்?
தேவையான பொருட்கள்:
சுக்கு, கொத்தமல்லி விதைகள், மிளகு, துளசி, வெற்றிலை, தேன்
முதலில் ஒரு கடாயில் சுக்கு, மிளகு மற்றும் கொத்தமல்லி விதைகள் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்பு ஆற வைத்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதில் வெற்றிலை மற்றும் துளசி இலைகளை சேர்த்து, அரைத்து வைத்த சுக்கு, மிளகு பொடியை ஒரு டீஸ்பூன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும். பின்பு இதில் தேன் ஊற்றி தினமும் காலையில் டீ, காபிக்கு பதிலாக குடித்து வரவும். இவ்வாறு குடிப்பதால் நுரையீரலில் உள்ள சளி கரைந்து வெளியேறிவிடும்.