பொதுவாக நம் உடல் கழுத்து, கை, கால் பகுதியில் அனைவருக்கும் தெரியும் விதத்தில் மருக்கள் இருந்தால் அது நம்மை தன்னம்பிக்கையை இழக்க செய்கிறது. இது அழகுரீதியாகவும், உடல் ரீதியாகவும் அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு மருந்துகள் பல இருந்தாலும் எதுவும் நிரந்தர தீர்வை தருவதில்லை.
மேலும் இந்த மருக்கள் ஒருவித பாக்டீரியா தொற்றுகளால் உடலில் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டாலும், உடல் சுத்தம் இல்லாமல் இருந்தாலும் இந்த மருக்கள் உருவாகும். எனவே இப்படிப்பட்ட அழகையும், உடல் நலத்தையும் கெடுக்கும் மருக்களை ஒரே வாரத்தில் எளிதில் வீட்டு வைத்திய முறைப்படி குணப்படுத்தலாம். இதைக் குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
தேவையான பொருட்கள் : வெற்றிலை, சுண்ணாம்பு
இந்த இரண்டு பொருட்களின் மூலமாகவே மருக்களை எளிதில் சரி செய்யலாம். முதலில் வெற்றிலையை, காம்பை மட்டும் கிள்ளி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த வெற்றிலை காம்பை நன்றாக அரைத்து சுண்ணாம்பு சிறிதாக கலந்து அதனை மரு உள்ள இடத்தில் தினமும் தேய்த்து வந்தால், ஒரே வாரத்தில் மருக்கள் தானாகவே உதிர்ந்து விடும்.
இதன் பிறகு உடலில் புதியதாக மருக்கள் உருவானாலும், இதே முறையை பயன்படுத்தலாம். மேலும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் சாறு அடிக்கடி குடித்து வர வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமடைந்தால் மருக்கள் உடலில் உருவாகாது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.