மக்கள் குளிர்காலத்தில் ஏற்படும் பாத வெடிப்பினால் பல அவஸ்தை அனுபவித்து வருகின்றனர். சிலருக்குக் இந்த வெடிப்பின் காரணமாக காலில் ரத்தக் கசிவுகள் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய மக்கள் பல கிரீம்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனை உபயோகிப்பதன் மூலம் இந்த பிரச்சினை தீரும் என்று கூறிவிட முடியாது. ஆனால் , இந்த இரண்டு இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், நிச்சயம் இதிலிருந்து நீங்கள் நிரந்தரமான நிவாரணத்தை பெற முடியும்.
இயற்கையான முறையில் இதற்கான தீர்வை காண முடியும். அதற்கு வீட்டில் கிடைக்கும் நெய் எடுத்து பாதங்களில் தடவி வருவதால் பாதங்கள் மற்றும் குதிகால் தோலை மிகவும் மென்மையாக வைத்து கொள்ள உதவுகிறது. இதனையடுத்து மஞ்சள் மற்றும் வேப்பம்பூவை நெய்யில் கலந்து காயம் இருக்கும் இடத்தில் தடவி வர வெடிப்பு பிரச்சனையில் இருந்து விரைவில் விடுதலை கிடைக்கும்.
பசு நெய்யை சூடாக்கி எடுத்து கொண்டு மேலும் சிறிதளவு வேப்ப எண்ணெய் சேர்த்து கொண்டு அதில் மஞ்சளை போட்டு, அக்கலவையை ஆற வைக்க வேண்டும். பிறகு அந்த காலில் தடவி வர விரைவில் நலன் பெறலாம்.