fbpx

பதினாறு வேர்க்கடலை நம் உடலில் செய்யும் மாயம்…

நிலக்கடலையில் பல உபரி ரகங்கள் உயிரித் தொழில்நுட்பத்தின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. உலகெங்கிலும் பல கோடி மக்கள் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு உணவாக கருதி அதிகம் உண்கின்றனர்.

இயற்கையான சத்துக்களை அதிகம் கொண்ட இந்த நிலக்கடலையை மனிதர்கள் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குடல் புற்று நோய் குணமாக புற்று நோய்களில் பல வகைகள் உள்ளன. உலக சுகாதார நிறுவன கணக்கின் படி 2012ஆம் ஆண்டு முதல் வயிறு மற்றும் குடலில் ஏற்படும் புற்று நோய் பாதிப்புகள் உலகெங்கிலும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. நிலக்கடலை எனப்படும் வேர்க்கடலை வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.

இதில் நிறைந்திருக்கும் சைட்டோஸ்டீரால் எனப்படும் வேதிப்பொருள் வயிறு மற்றும் குடல் செல்களில் புற்று நோய் செல்கள் வளராதவாறு தடுத்து, குடற்புண் ஏற்பபடமால் பாதுகாக்கிறது. வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நிலக்கடலை சாப்பிட்டவர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படும் ஆபத்து வெகுவாக குறைந்திருப்பதாக அமெரிக்க மருத்துவ குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

மூளை திறன் அதிகரிக்க மனிதனின் அத்தனை விதமான செயல்களுக்கும் அடிப்படை உறுப்பாக மூளை இருக்கிறது. தினந்தோறும் நிலக்கடலை சாப்பிடும் நபர்களுக்கு மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு, கூர்மையான நினைவாற்றல் உண்டாவதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கின்றன.

நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் எனப்படும் வேதிப்பொருள், உடலில் இருந்து மூளைக்கு ரத்தம் பாய்வதை தங்குதடையில்லாமல் பார்த்துக் கொள்வதால் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயலாற்றுகிறது. மேலும் இதில் வைட்டமின் பி3 மற்றும் நியாசின் வேதிப்பொருட்கள் இருப்பதால் மிக வலுவான ஞாபக சக்தியை கொடுக்கிறது. மேலும் மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள் சிறப்பாக செயலாற்ற உதவி செய்கிறது.

கர்ப்பிணி பெண்கள் கருவுற்ற பெண்கள் ஃபோலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். நிலக்கடலையில் இந்த போலிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. தொடர்ந்து சாப்பிட்டு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மூளை சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாமல் தடுப்பதாக அவர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் பிறக்கப் போகும் குழந்தைக்கு எதிர்காலங்களில் ஆஸ்துமா நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களையும் வெகுவாக குறைப்பதாகவும் அந்த ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. அல்சைமர் ஏற்படாமல் தடுக்க (அல்சைமர் என்பது முதுமை அடைந்த நபர்களுக்கு ஏற்படும் தீவிர ஞாபக மறதி நோயாகும்) உதவுகின்றது. இந்த நோய் நம் நாட்டில் மிகக் குறைந்த அளவிலும், மேற்கத்திய நாடுகளில் மிக அதிக அளவில் ஏற்படுகின்ற ஒரு நோயாக இருக்கிறது. இந்த நோய் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக மூளைக்குத் தேவையான சத்துக்கள் இல்லாத உணவுகளை அதிகம் சாப்பிடுவது என கூறப்படுகிறது. நிலக்கடலையில் நியாசின் அமிலம் அதிகமிருக்கிறது. நிலக்கடலையை அதிகம் சாப்பிடும் நபர்களுக்கு ஞாபக சக்தி வலுவடைவதோடு, மூளையின் செயல்பாடும் சுறுசுறுப்பாக இருக்கிறது. மேலும் அந்நபருக்கு 70 சதவீதம் வரை இந்த அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒரு நாளைக்கு 45 கிராம் வேர்க்கடலை அதாவது 16 வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 16 வேர்க்கடலையை தினமும் உண்பதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

Next Post

பொதுமக்களே கவனம்...! வந்தது புதிய கட்டுபாடு...! ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு...!

Thu Oct 13 , 2022
உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டுபாடு விதித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; இனிப்பு, காரம் தயாரிக்கும் சமையலறையில் போதுமான உறிஞ்சும் அமைப்புடன் கூடிய புகை போக்கி மற்றும் முறையான கழிவு நீர் வடிகால் அமைப்பு வேண்டும். உணவு பொருள் தயாரிப்பு வளாகத்தினுள் ஈக்கள், பூச்சிகள் புகாத வகையில் தடையமைப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு முறைகள் செயல்படுத்த […]

You May Like