இனிப்பு புளிப்பு சுவையுடைய செர்ரி பழங்களில் 2ஐ மட்டும் இரவு நேரங்களில் சாப்பிட்டு பாருங்கள் உங்கள் உடலில் நடக்கும் அதிசயங்களை நீங்களே உணர்வீர்கள்…
செர்ரி பழங்கள் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் இரு வகைகளாக மார்க்கட்டில் கிடைக்கிறது .இவை இரு சுவையுள்ள பழங்கள் அனைத்துமே நம் உடலுக்கு நிறைய நன்மைகள் செய்ய கூடியது ,மேலும் இதில் ஊட்டசத்துக்களும் ,தாதுக்களும் நிறைந்துள்ளது .
இதில் நம் இதய துடிப்புக்கு தேவையான பொட்டாசியம் சத்துக்கள் அடங்கியுள்ளது மேலும் இந்த பழங்கள் நம் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும் குணமுள்ளது .மேலும் முதுமையடைதல் ,கேன்சர் ,மற்றும் நீரிழிவுக்கு எதிராக இந்த பழங்கள் செயலாற்றும்.
நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் செர்ரிபழத்தில் உள்ளது.அதனால் இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.
மேலும் இந்த பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அளவிடமுடியாத அளவுக்கு அடங்கியுள்ளது .மேலும் இது நம் எடை குறைப்புக்கும் வழி வகுக்கும் ஆதலால் தினமும் இரண்டு பழங்களை சாப்பிட்டு நம் உடல் மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.
இது மற்ற உணவுப் பொருட்களால் கிடைக்கும் வைட்டமின்கள், தாது உப்புகள் என அனைத்தையும் எளிதில் உணவு மண்டலத்தால் உட்கிரகிக்கச் செய்கின்றது. தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான இளமையில் முதுமையான தோற்றம், வறண்ட தோல், தோல் சுருக்கம் என அனைத்துவகையான பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வாக அமைகின்றது.
மனஅழுத்தத்திற்கு தீர்வு – உடலில் நரம்பு கோளாறுகள் மற்றும் மன அழுத்தம் அதிகம் கொண்டவர்கள் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடும் மேற்கண்ட பாதிப்புகள் கொண்டவர்கள் செர்ரி அதிகம் சாப்பிட்டு வருவது நல்லது. செர்ரி பழங்கள் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது.