fbpx

பீர்க்கங்காயால் கிடைக்கும் சத்துக்கள் நம் உடலில் செய்யும் அற்புதம்…!!

பீர்க்கங்காயில் வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோ வின், மெக்னீசியம், தயாமின் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் இதில் உள்ளன. இது இன்னும் ஏராளமான நன்மைகளை நமக்கு வழங்குகிறது.

பீர்க்கங்காயில் ஏற்கனவே குறைந்த கலோரிகள் காணப்படுகின்றன. இதில் நார்ச்சத்துக்கள் அதிகளவு காணப்படுகிறது. கொழுப்பை சரியாக ஜீரணித்து உறிஞ்சும்  உணவு இழைகளால் நிரம்பியுள்ளது.

பீர்க்கங்காயை சாப்பிட்டால் வயிறு நிரம்பிய எண்ணம் தோன்றும். அதனால் நீங்கள் நொறுக்கு தீனிகளை வாங்கி சாப்பிட மாட்டீர்கள். இதனாலேயே உங்க உடல்  எடையை குறைக்க முடியும்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. பீர்க்கங்காயில் உள்ள பெப்டைடுகள் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளன. இவை உங்கள் வளர்ச்சிதை  மாற்றத்தை துரிதப்படுத்தும்.

பீர்க்கங்காய் நமது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இது உடலில் சர்க்கரையை முறையாக சுரக்கவும் உறிஞ்சவும் உதவுகிறது. 

இரும்புச் சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்படுகிற நிறைய பேர் இரத்த சோகை போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

சரும பிரச்சனைகள் பெரும்பாலும் குடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. எனவே வாரத்திற்கு இரண்டு முறையாவது பீர்க்கங்காய் சேர்ப்பது உங்க சருமத்தை பளபளக்க வைக்கும். சிறுநீரக கோளாறுகளுக்கு  நன்கு  முற்றிய பீர்க்கங்காயை பயன்படுத்தப் படுகிறது. பீர்க்கங்காயில்  இருக்கும்  வைட்டமின்கள் தோல் நோய்களையும் மற்றும் நீரழிவு நோய்களையும் குணப்படுத்துவதில் உதவுகின்றன.

பீர்க்கங்காயை உணவில் எடுத்து கொள்ள அதிகபடியான காய்ச்சல், சளி தொல்லை, இருமலால் அவதிபடுவோருக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. ரத்த சோகையில் இருந்து விடுபட பீர்க்கங்காய் சாப்பிடலாம்.

பீர்க்கங்காயின் பழங்கள் நன்மை தர கூடியதே. அதை வாந்திக்கு பயன்படுத்தலாம்.  சுவாச கோளாறுகளுக்கும் அருமருந்து. மண்ணீரலில் ஏற்படும் புண்களை குணப்படுத்த பீர்க்கங்காயின் சாற்றை அதில் போடுவதன் மூலம் விரைவில் குணம் அடையும்.

உடலில் இருக்கும் எண்ணெய் சருமத்திற்கு இதனை பயன்படுத்த நல்லது. இதில் அடங்கி இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் இருப்பதால், தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம்.
சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.

Next Post

ஜாலி... இந்த மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை...! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...!

Fri Oct 28 , 2022
நவம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. அதற்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த குமரி, பலவகையிலும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தது. தியாகம், உயிரிழப்பு, மாபெரும் போராட்டங்கள் என ஏராளமான வரலாறுகளும் அதன்பின்னால் இருக்கிறது. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின்னர், தாய் தமிழகத்தோடு குமரி இணைந்து 66 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளது. தமிழகத்தின் […]

You May Like