தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலருக்கும் வீட்டில் சமைத்து சாப்பிட நேரம் போதவில்லை என்பதால் அடிக்கடி ஹோட்டல்களில் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இது உடல் நலத்திற்கு பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்துகிறது. ஆனால் இவ்வாறு வேகமான காலகட்டத்தில் சில நிமிடங்களிலே சமைத்து சாப்பிடும் உணவு பொருட்களை ரெடிமேடாக செய்து வைத்துள்ளனர். இத்தகைய உணவுகளை சாப்பிடும் போது உடலுக்கு மிகப்பெரும் ஆபத்தாகி உயிருக்கே உலை வைக்கும். இவ்வாறு ரெடிமேட்டாக செய்த உணவுப் பொருட்களை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்?
1. தற்போது ரெடிமேடாக கடைகளில் விற்கப்படும் சப்பாத்தி, பரோட்டா, நான் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
2. மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நறுக்கி அதை ஒரு காற்று போகாத பாக்கெட்களில் போட்டு விற்பனை செய்கின்றனர். இது பல நாட்கள் கெட்டுப் போகாது என்பதால் இதையும் சாப்பிடக்கூடாது.
3. உணவுப் பொருட்கள் கெட்டு போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் பதப்படுத்தப்படுத்தப்பட்ட ரசாயனங்கள் மிகவும் ஆபத்தானது என்பதால் இந்த ரசாயனங்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
4. ஒரு சில இடங்களில் கடல் உணவுகள் கிடைக்காது என்பதால் அப்பகுதியில் கடல் சார்ந்த மீன், இறால், நண்டு போன்றவற்றை பதப்படுத்தப்பட்ட ரசாயனங்களை சேர்த்து விற்பனை செய்கின்றனர். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
5. தற்போது கடைகளில் விற்கப்படும் ஊறுகாய், அப்பளம், வடாம் போன்ற பொருட்களிலும் இந்த ரசாயனம் கலப்பதால் பெரும்பாலும் வீட்டில் சமைத்த சூடான உணவுகளை சாப்பிடுவதை உடல் நலத்திற்கு நல்லது என்ற மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
6. சூப்கள், நூடுல்ஸ், பாஸ்தா போன்ற சில நிமிடங்களிலேயே சமைத்து சாப்பிடும் உணவும் உடலுக்கு ஆபத்துதான்.