சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறுநீரகம் தொடர்பான எந்த பிரச்சனையும் உங்கள் அன்றாட வாழ்க்கையை பெரிது பாதித்து, வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் காரணமாகவும் சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படுகிறது.சிறுநீரக நோய்களின் ஆரம்ப கட்டத்தில், பிரச்சனை வெளியே தெரியாது; காலப்போக்கில் மெதுவாக தீவிரமடையும். எனவே இந்த சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறுநீரகம் தொடர்பான எந்த பிரச்சனையும் உங்கள் அன்றாட வாழ்க்கையை பெரிது பாதித்து, வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறுநீரகத்தின் செயல்பாடு, நம் உடலில் உள்ள இரத்தத்தை வடிகட்டுவது. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால், இரத்தத்தை வடிகட்டும், சுத்தம் செய்யும் முக்கிய வேலை பாதிக்கும். சிறுநீரக நோயில், சிறுநீரகம் சரியாக செயல்பட முடியாது. பின்னர் இந்த பிரச்சனை, நாள் செல்ல செல்ல தீவிரமடையும். இதனால் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயமும் உள்ளது.
முக்கிய அறிகுறிகள் : நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படும்போது, உடலில் உள்ள இரத்தத்தை வடிகட்ட முடியாமல் போவதால், உடலில் அரிப்பு, தசைப்பிடிப்பு, பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி, கால்கள் மற்றும் கணுக்காலில் வீக்கம், அதிக சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் கழிக்க இயலாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். நாள்பட்ட சிறுநீரக நோய் காரணமாக தூங்க முடியாமலும் சிரமங்கள் ஏற்படும்.
சிக்கல் ஏற்பட காரணம்: ஹைபர் டென்ஷன், அதாவது உயர் இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் காரணமாக சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படலாம். இது தவிர புகைபிடிப்பதும் ஒரு காரணம். அதிக உடல் எடையும் நாள்பட்ட சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.